Anirudh: எந்த நிலை சென்றாலும் வந்த நிலை மறக்கக் கூடாது என்று சொல்வார்கள். அந்த நிலையை மறந்து கொஞ்சம் மாற்றம் போட்டதால் தற்போது அஸ்திவாரமே ஆட்டம் காணும் அளவுக்கு ஆகிவிட்டது அனிருத்துக்கு.
தனுஷ் மூலம் அறிமுகமான அனிருத் அவர் மூலம் சிவகார்த்திகேயன், அதன்பின்னர் இவர்களின் நெருங்கிய வட்டாரம் என்று தன்னுடைய சகாக்களின் மூலமாகத்தான் வெற்றி படிக்கட்டுகளை ஏறினார். இந்த கூட்டத்தில் ஒருவர்தான் அட்லி.
இயக்குனர் அட்லி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் போகும்போது கையோடு அனிருத்தையும் அனைத்து சென்றார் என்று தான் சொல்ல வேண்டும். அனிருத் கைவசம் தற்போது டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டும் தான் இருக்கின்றன.
வாலாட்டிய அனிருத்
அதில் ஒரு சில ஹீரோக்களுக்கு மெனக்கட்டு இசை அமைக்கிறார் என்று குற்றச்சாட்டு வேற. இதற்கு இடையில் அட்லி மீண்டும் அனிருத்துடன் இணைந்து இருக்கிறார்.
ஆனால் இசைக்காக இருவரும் அமர்ந்து பணியாற்ற எத்தினிக்கும் போதெல்லாம் அனிருத் படு பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாரா அல்லது நிஜமாகவே பிஸியாக இருக்கிறாரா என்று தெரியவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான அட்லி சாய் அபயங்கர் பக்கம் திரும்பி விட்டார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய நெருங்கிய சகாக்கள் எல்லோருக்கும் இந்த புது இசையமைப்பாளரை பரிந்துரை செய்கிறார்.
இதன் விளைவு தான் சிவகார்த்திகேயனின் படத்தில் சாய் ஒப்பந்தமானது. தேவை இல்லாமல் அனிருத் அட்லி இடம் ஆட்டிட்யூட் காட்டி இப்போது பஞ்சர் ஆகிவிட்டதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.