2025 ஆம் ஆண்டு ஆரம்பித்தது தான் தெரிகிறது அதற்குள் எட்டாவது மாதத்திற்கு வந்து விட்டோம் இன்னும் நான்கு மாதங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைக்கட்டி விடும். இந்த 4 மாதங்களில் அடுத்தடுத்து வெளிவரவருக்கும் 5 பான் இந்திய படங்கள்
கூலி: ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படம் உலகளவில் ரிலீசாக உள்ளது. சுதந்திர தின விடுமுறையை கூறி வைத்து இந்த படத்தை இறக்குகிறார்கள். சும்மாவே ரஜினி படங்கள் என்றால் கலைக்கட்டும் அதிலும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
வார் 2: ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம். இதுவும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கூலி படத்திற்கு சரியான போட்டியாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதராசி: அடுத்த மாதம் செப்டம்பர் ஐந்தாம் தேதி இந்த படம் வெளி வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயங்கும் படம் இது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படமும் பான் இந்திய படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
காந்தாரா: அக்டோபர் இரண்டாம் தேதி ரிசப் செட்டி இயக்கி நடித்த காந்தாராவின் அடுத்த பாகம் வெளிவர இருக்கிறது. ஆனால் ஏற்கனவே முதல் பாகம் வந்துவிட்டது. இப்பொழுது இதை இரண்டாம் பாகமாக எடுத்திருக்கிறாரா அல்லது முந்தைய வெர்சனா என்பது தெரியவில்லை.
பாகுபலி தி எபிக்: இது என்ன புது பெயரா இருக்கிறது என்பதுதான் அனைவரது கேள்வியும். முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் சேர்த்து ஒரு combined வெர்சனாக இந்த படத்தை 5 மணி நேரம் 27 நிமிடம் உருவாக்கி இருக்கிறார் ராஜமவுலி. ஏற்கனவே பார்த்த படம் என்பதால் இதற்கு ரெஸ்பான்ஸ் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதை அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்.