Vijay: வாரிசை எப்படி வளர்த்து விட வேண்டும் என்பது தெரியாமல் விஜய் சேதுபதி பெரிய தவறை செய்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் சேதுபதியின் மகன் ஹீரோ ஆகி இருக்கிறார், அவரை எப்படியாவது வெற்றியடைய வைக்க வேண்டும் என அவருடைய ரசிகர்களே முயற்சி எடுக்கவில்லை.
இதற்கு முதல் காரணம் சூர்யா சேதுபதியின் வயது, இன்னொரு காரணம் அவருடைய ஆட்டிட்யூட். இந்த விஷயத்தில் விஜய் பக்காவாக எல்லாவற்றையும் பிளான் பண்ணி செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
விஜய் கிட்ட கத்துக்கோங்க
ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆனதிலிருந்து இதுவரையிலும் விஜய் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமும் அவர் செய்யவில்லை.
விஜய் நினைத்திருந்தால் படப்பிடிப்பு தளத்துக்கு போய் மகன் என்ன வேலை செய்கிறான் என்று பார்ப்பது, ஷூட்டிங் ஸ்பாட்டில் வீடியோ எடுத்து வெளியிடுவது என எக்கச்சக்க ப்ரமோஷன் பண்ணி இருக்கலாம். பட பூஜையில் இருந்து இந்த நாள் வரைக்கும் விஜய் அந்த இடத்தில் இல்லவே இல்லை.
உண்மையை சொல்லப்போனால் விஜய் மகன் என்பதால்தான் முதல் படத்தின் வாய்ப்பே லைக்கா நிறுவனம் கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக இதற்கு பின்னால் விஜய்யின் செல்வாக்கு தான் நின்று பேசி இருக்கிறது. ஆனால் அதை அவர்கள் விஜய் சேதுபதி மாதிரி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டவில்லை.
ஆனால் விஜய் சேதுபதி மகனின் பட விழாவுக்கு போவது, பிரமோஷன் விழாவுக்கு போவது, மன்னிப்பு கேட்பது என வெளிப்படையாக தன்னுடைய செல்வாக்கை காட்டிக் கொண்டிருக்கிறார். நேற்று விஜய் இந்த படத்திற்கு பிரமோஷன் செய்ததெல்லாம் நெப்போடிசத்தின் உச்சகட்டம் என்று கூட சொல்லலாம்.
தமிழ் சினிமாவின் உச்சியில் இருக்கும் ஹீரோ தன் மகனின் வளர்ச்சியில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் காட்டிக் கொள்கிறார். இந்த சூத்திரம் தெரியாமல் மகனோடு சேர்ந்து தற்போது விஜய் சேதுபதியும் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.