Murali: நடிகர் முரளிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் எதிர்பாராத விதமாக மறைந்தது இப்போது வரை திரையுலகுக்கு பேரிழப்புதான்.
இவர் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருந்த போது விஜயகாந்த் இடத்தை பிடித்து விடுவார் என பலரும் நினைத்தார்கள். அதற்கேற்றார் போல் இவரும் நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
ஆனால் இடையில் இவருக்கு இருந்த வீக்னஸ் அவருடைய மார்க்கெட்டை காலி செய்து விட்டது. படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இருப்பது முதல் தயாரிப்பாளரிடம் பிரச்சினை வரை ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் இவர் மீது இருந்ததாம்.
மார்க்கெட்டை காலி செய்த விக்னஸ்
அதேபோல் குடிப்பது பெண்கள் சகவாசம் என இவர் தடம் மாறி போனதும் கூட இவருடைய மார்க்கெட் இறங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி கூட பலமுறை முரளிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காமல் தன் போக்கில் அவர் இருந்தாராம். இதன் காரணமாக பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் இவரை தங்கள் படங்களில் கமிட் செய்ய தயங்கி இருக்கிறார்கள்.
இப்படித்தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது என இயக்குனர் வி.சேகர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து பல கிசு கிசுக்கள் வந்திருந்தாலும் வெளிப்படையாக இயக்குனர் தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.