Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து, பல மாதங்கள் ஆன நிலையில், அனைவராலும் கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகி, இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறார் என்று பேசப்பட்டு தற்போது அதே வாயால் முதலமைச்சராகிவிடுவாரோ என்று பேசும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.
நடிகர்கள் பல கட்சி ஆரம்பித்து, அதில் வெற்றி பெற்றவர்கள் சிலரே. முதன் முதலில் நடிகராக இருந்து கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்தை நன்றாகவே ஆட்சி செய்துவிட்டார். நடிப்பிலும் சரி அரசியலிலும் சரி தனக்கென ஒரு இடம் ஒதுக்கி வைத்து சென்று விட்டார் எம்ஜிஆர் அவர்கள்.
அனைவரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்று நடிகர் விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்த போதும் கூறினார்கள். ஆனால் மக்களை நம்பி ஏமாந்து போனார் விஜயகாந்த் அவர்கள். ஆனால் இன்று விஜயகாந்த் அவர்களை அரசியலில் தவற விட்டு விட்டோம் என மனம் வருந்தி கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
விஜயகாந்த் அவர்களுக்கு பிறகு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி பிறகு இல்லை என அறிவித்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கட்சி ஆரம்பித்து தற்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ளார்.
வடசென்னை பட பாணியில் விஜய் மாஸ்டர் பிளான்..
தமிழ்நாட்டு அரசியல் சற்றும் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் இறங்கியது அனைவருக்கும் அதிர்ச்சியே. ஆனால் மற்ற நடிகர்களைப் போல் கூட்டம் சேராது என்று நினைத்தார்கள் போல. இப்போது நடிகர் விஜய் அவர்கள் ஜெயித்து விடுவாரோ என்ற எண்ணத்தில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிரச்சாரம் தொடங்கிவிட்டது.
தற்போது நடிகர் விஜய் அவர்கள் கட்சி இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார் இது அனைவரும் அறிந்தது. ஆனால் விஜயகாந்த் அவர்கள் பிறந்தநாளன்று நடத்த உள்ளார், அது மட்டுமல்லாமல் அன்றுதான் விஜய் அவர்களின் திருமண நாளாம். இதில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்று என்னவென்றால் விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்து நடத்திய முதல் மாநாடு மதுரையில் தான் நடைபெற்றது.
விஜயகாந்த் அவர்கள் பிறந்தநாளில் விஜய் தனது கட்சி மாநாட்டை வைத்திருப்பதே இங்கு பெரும்பாலான கட்சிகளை நடுங்க வைத்திருக்கிறது. அந்த வகையில் வடசென்னை படத்தில் ராஜன் அண்ணனுக்காக, அனைவரையும் பழிவாங்க அன்பு களம் இறங்கியது போல்.
இன்று தமிழ்நாட்டில் ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருக்கிறது. என்னவென்றால் அன்று அண்ணன் விஜயகாந்த் அவர்கள் ஏமாற்றப்பட்டது போல் விஜயகாந்த் அண்ணனுக்காக களம் இறங்குகிறாரா விஜய் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் அன்று சினிமாவில் விஜய் அவர்களை அறிமுகம் செய்ததை விஜயகாந்த் அவர்கள் தான். அன்று படத்தில் விஜய் விஜயகாந்த் அவர்களே அண்ணன்,அண்ணன் என்று கூப்பிட்டார். இன்று உண்மையாகவே அந்த அண்ணனுக்காக களம் இறங்கி விட்டாரா? விஜய் அவர்களுக்கு விஜயகாந்தின் மீது உள்ள நன்றி கடனுக்காக விஜயகாந்தின் ஆசையை நிறைவேற்ற பாடுபடுகிறாரா? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில்பரவி வருகின்றன.
ஆனால் நெருப்பு இல்லாமல் புகையாது என்பது போல, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் விஜய் அவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார் போல. பெருசாக ஏதோ சம்பவம் செய்யப் போறீங்க விஜய் சார். அதற்காக we are waiting.