Sivakarthikeyan: யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கண்ணதாசன் எழுதி இருப்பார். அப்படி ஒரு நிலைமையில் தான் இயக்குனர் வெங்கட் பிரபு இருக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து படம் பண்ணப் போவது உறுதியாகிவிட்டது.
வெங்கட் பிரபு இயக்குனரான காலத்தில் இருந்தே அவருடைய படத்தில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என்பது எழுதப்படாத சட்டம். சமீபத்தில் வெங்கட் பிரபு விஜய் உடன் இணைந்து கோட் படத்தில் பணியாற்றினார்.
சரண்டர் ஆன வெங்கட் பிரபு
சமீபத்திய விஜய் படங்களாக இருக்கட்டும், அல்லது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு படங்களாக இருக்கட்டும் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். இந்த விதியை தலைகீழாக மாற்றி தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவை உள்ளே கொண்டு வந்தார்.
இந்த ஜகஜால வேலை சிவகார்த்திகேயனிடம் செல்லுபடி ஆகவில்லையாம். சிவகார்த்திகேயனின் படம் என்றாலே அனிருத் தான் இசையமைப்பாளர். தற்போது வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை இயக்கும் படத்திலும் அனிருத் தான் பணியாற்ற இருக்கிறார்.
அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அவருடைய கால்ஷீட் வேண்டுமென்றால் அனிருத்தை படத்தில் வைத்து தான் ஆக வேண்டும். ஆக மொத்தம் ஒட்டுமொத்த நெப்போடிசத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் அனிருத்.