Vijay : நடிகர் விஜய் அவர்களை அனைவருக்கும் பிடிக்கும். விஜய் என்றைக்கு கட்சி ஆரம்பித்தாரோ அன்றையிலிருந்து பெரும்பாலும் எதிரிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என விஜய் எதிர்பொருக்கு பஞ்சம் இல்லை.தற்போது விஜய் அவர்களின் பிறந்தநாள் முடிந்திருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் அனைவரும் இதை திரிவிழா போல கொண்டாடினர்.
எப்போதும் விஜய் அவர்கள் பிறந்தநாள் கொண்டாடினாலும் இப்போதைய பிறந்தநாள் மிகவும் சிறப்பு. நடிகர் விஜயாக பிறந்தநாள் கொண்டாடியதற்கும், அரசியல்வாதி விஜயாக பிறந்தநாள் கொண்டாடியதற்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு. ரசிகர்களின் வாழ்த்துக்கள் மட்டுமல்லாமல் விஜயின் தொண்டர்களும் வாழ்த்து கூறினார்கள்.
பயந்து வாழ்த்து கூறாத நடிகர்கள்..
ஆனால் விஜய் அவர்களுக்கு வாழ்த்து கூறாத பிரபல நடிகர்கள் என வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் அவரது நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவில் நடிகர்களின் வீரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்தான் விஜய்க்கு வாழ்த்து கூறாத நடிகர்களை கூறுகிறார்.
சூர்யா, ரஜினிகாந்த போன்ற நடிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்து சொல்லாதது நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது என்றும், சிவகார்திகேயன் போன்ற நடிகர்கள் வாழ்த்து கூறவில்லை என்றால் அவர் வளர்ந்து வரும் நடிகர் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதாக கூட இருக்கலாம்.
ஆனால் சூர்யா, ரஜினிகாந்த் அவர்கள் கூறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் திமுக ஆட்சியில் இருப்பதால் நடிகர்கள் வாழ்த்து சொல்ல பயப்படுகிறாரகளா என்பது தெரியவில்லை. வாழ்த்து கூறினால் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமையும் என்பதால் அனைவரும் பயப்படுகிறாரகள் போல.
ரஜினிகாந்த அவர்கள் விஜய் அவர்களை தான் பார்த்து வளர்ந்த பிள்ளை என்று பெருந்தன்மையாக பேசியிருந்தாலும் ஆனால் வாழ்த்து கூறவில்லை என்றும் கூறியுள்ளார். ஒருவேளை இந்த நடிகர்கள் எல்லாம் தனிப்பட்ட முறையில் விஜய்க்கு போனில் வாழ்த்து கூறிருந்தாலும் கூறியிருக்கலாம் எனவும் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் அவரது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.