Mahanadhi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரிக்கு பிரச்சனை கொடுக்கும் விதமாக பசுபதி கொடைக்கானலில் இருக்கும் வீடு சந்தானம் எனக்கு எழுதி கொடுத்தது. அவருடைய மூத்த பொண்ணு கல்யாணத்துக்காக பத்து லட்ச ரூபாய் இந்த வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கினார். அதன் பின் அவர் இறந்து போய்விட்டார்.
எனக்கு பணமும் வந்து சேரவில்லை, வட்டியும் வரவில்லை என்று சொல்லி வீட்டை வாங்குவதற்கு பசுபதி பிளான் பண்ணிவிட்டார். இதை கேட்டு காவிரி கொந்தளித்து பசுபதி உடன் சண்டை போட ஆரம்பித்து விட்டார். பிறகு போலீஸ் வந்தும் பசுபதிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக இந்த விஷயத்தை கோர்ட் மூலமாக டீல் பண்ணி நியாயத்தை வாங்கிக்கோங்க என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் காவேரி மற்றும் சாரதா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அங்கே இருக்கிறார்கள். பசுபதியும் அடங்காமல் அங்கேயே இருந்து காவிரிக்கு பிரச்சினை கொடுக்கிறார். இதனை அடுத்து நவீன் வீட்டுக்கு விஜய் வருகிறார். அப்பொழுது யமுனா தான் கதவை திறந்து விடுகிறார். முதல் முறையாக இந்த யமுனாவும் விஜயும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் யமுனாவிற்கு விஜய் ஜெயிலுக்கு போன காரணம் அவர்தான் என்ற குற்ற உணர்ச்சியால் அமைதியாக நிற்கிறார். அதனால் சரியாக பேச முடியாமல் போய்விடுகிறார். பிறகு நவீனை பார்த்து விஜய் பேசும் பொழுது காவிரி என்னுடன் வருவதற்கு தயாராக இருந்தாள். அப்படி இருக்கும் போது திடீரென்று அவங்க அம்மா சொன்னாங்க என்று வரமாட்டேன் என்று சொல்வதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது.
அதன் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன் என நவீன் இடம் விஜய் கேட்கிறார். அப்பொழுது நவீன் உண்மையை சொல்வார் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அதற்குப் பதிலாக பசுபதி கொடைக்கானலில் பிரச்சனை கொடுக்கிற விஷயத்தையும் காவிரி அங்கே போய் பசுபதி உடன் மோதுகிறார் என்ற விஷயத்தையும் சொல்லுகிறார். எந்த வகையில் காவிரியை காப்பாற்றும் விதமாக விஜய் கொடைக்கானலுக்கு சென்று பசுபதிக்கு முடிவு கட்டப் போகிறார்.