Vijay-Seeman: தற்போது அரசியல் வட்டாரம் மிகுந்த பரபரப்புடன் இருக்கிறது. வரும் 2026 இல் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் சம்பாதிக்கும் நோக்கில் அனைத்து கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.
அதில் ஆளும் கட்சி புது வியூகங்களை வகுத்து வருகிறது. அதற்கு போட்டியாக மக்கள் செல்வாக்கை பெற விஜய் களம் இறங்கி உள்ளார். அதேபோல் சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் திமுக அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்பது கிடையாது என அறிவித்தார்.
இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் விஜயுடன் கூட்டணி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தம்பியுடன் இணைந்து அரசியல் பயணம் செய்வது ரொம்பவும் கடினம்.
சீமான் கொடுத்த விளக்கம்
ஏனென்றால் அவர் பெரியாரை தன்னுடைய கொள்கை தலைவராக ஏற்றுள்ளார். ஆனால் எங்களுக்கு அது தேவையில்லை. பெரியார் இல்லாமல் அரசியல் கிடையாது என்கின்றனர். அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேபோல் எங்களுடைய கோட்பாடு வேறு. அதனால் விஜயுடன் இணைந்து அரசியல் என்பது நடக்காது என தெரிவித்துள்ளார். அதே சமயம் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தம்பியின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது எனவும் பாராட்டியுள்ளார்.
இதன் மூலம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி இல்லை என்பதை சீமான் சொல்லிவிட்டார். ஆக மொத்தம் வர இருக்கும் தேர்தல் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.