Vijay : விஜய் கட்சி ஆரம்பத்திலுருந்தே அவரும் பிசியாகி, மீடியாக்களும் ரொம்ப பிசியாகி விட்டன. தொடர்ந்து அனல் பறக்கும் அரசியல் களத்தில் இருவரும் சேர்ந்தே பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்.
தற்போது விஜய் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற கேள்விதான் எங்குமே எழுந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியும் விஜய் அவர்களுடன் கூட்டணி போட தயாராக இருகின்றனர். ஆனால் விஜய் இன்னும் ஒரு முடிவும் எடுக்கவில்லை.
விஜய் கூட்டணியை எதிர்பார்த்து சில கட்சிகள் இருக்கின்றன. இந்த சிந்தனையே விஜய்யை வெற்றியை நோக்கி இழுத்து சென்றுவிடும். அதுமட்டுமல்ல விஜய் கட்சி நல்ல ஸ்ட்ராங் ஆக இருப்பதால் கொஞ்சம் பயம் வருகிறது போல.
கூட்டணியே வேண்டாம் விஜய்..
தற்போது கூட்டணி பற்றி கேள்வி வரும் நிலையில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் அளித்திருந்த நேர்காணல் ஒன்றில் விஜய் கூட்டணி பற்றி உடைத்து பேசியுள்ளார்.
அதாவது அவர் விஜய் யாருடனும் கூட்டணி வைக்காமலே இருப்பதே நல்லது என்று கூறியிருப்பது சற்று பரவலாக பேசப்படுகிறது. இவர் மூத்த அரசியல்வாதியாக விஜய் அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். எந்த கட்சியுடனும் கூட்டணி போட வேண்டாம். தனித்து செயல்படுங்கள் என கூறியுள்ளார்.
இதை இவர் நல்ல எண்ணத்தில் கூறியுள்ளாரா? அல்லது ஏதும் உள்குத்து இருக்கிறதா? என்று அரசியல் பிரபலங்கள் சந்தேகிக்கின்றனர். திடீரென இவர் விஜய்க்கு கொடுத்திருக்கும் அட்வைஸ், இவர் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதனால் இவர் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறாரா? என்று குழப்பத்தில் உள்ளார்களாம்.