Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கு வந்த விஜய் ஏமாற்றத்தில் இருக்கிறார். ஏனென்றால் பசுபதியை நடுரோட்டில் குமரன் விஜய் நவீன் தாக்கிய வீடியோ பசுபதியின் லாயர், ஜட்ஜிடம் காட்டி விடுகிறார். இதனால் பசுபதியை அடித்து அவர் மீது பொய்யான வழக்கை போடுவதற்கு இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று விஜய்க்கு எதிராக கேஸ் திரும்பிவிட்டது.
இருந்தாலும் கொஞ்சம் நேரம் அவகாசம் வேண்டும் என்று விஜய்யின் லாயர் கேட்டதால் இடைவெளி விடப்பட்டது. அந்த நேரத்தில் நவீன் கோர்ட்டுக்கு வந்து விடுகிறார். ஆனால் பசுபதியை எப்படியாவது கூட்டிட்டு வந்து விடுவேன் என்ற சொன்ன நவீன் தோற்றுப் போய் நிற்கிறார். அதாவது ராகினி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கூட்டிட்டு வரும் பொழுது புத்திசாலித்தனமான ராகினி, அதே கத்தியை வைத்து மிரட்டி நவீனை பாதியிலேயே இறக்கிவிட்டு அப்பாவை காப்பாற்றி விட்டதாக வந்து சொல்கிறார்.
இதனால் லாயர், அவங்க பக்கம் கேஸ் ஸ்ட்ராங்காக போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார். அதன் பிறகு மறுபடியும் ஜட்ஜ் வந்து கேட்ட பொழுது குமரன் வருகிறார். குமரன் வந்து நடந்ததை சொல்லி நம்பிராஜனை பசுபதி ஆட்கள் கூட்டிட்டு போன விஷயத்தையும் சொல்கிறார். ஆனால் இதையெல்லாம் கேட்ட பசுபதி லாயர், எந்த சாட்சியும் இவர்களிடம் இல்லை. சும்மா கட்டுக்கதை சொல்லி கோட் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் ஜட்ஜ், விஜய் மீது தீர்ப்பு சொல்லும் பொழுது கடைசி நேரத்தில் காவிரி வந்து விடுகிறார். காவிரி என்னிடம் இருக்கும் ஆதாரம் உங்களுக்கு ரொம்ப முக்கியமானது என்று சொல்லி வெண்ணிலாவே காட்டுகிறார். வெண்ணிலா நடந்து உண்மை செல்லும் பொழுது தலையில் அடிபட்டு இருந்தால் மயக்கத்தில் தல சுத்துகிறது என்று சொல்கிறார். இதனால் பயந்து போன காவிரி, வெண்ணிலாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தைரியம் சொல்கிறார்.
அப்பொழுது வெண்ணிலா, என்னை மாடியில் இருந்து தள்ளி விட்டது விஜய் இல்லை பசுபதி தான் என்று உண்மையை சொல்லி விஜய் காப்பாற்றி விடுகிறார். அந்த வகையில் விஜய் இந்த கேஸ்ல இருந்து தப்பித்து விடுகிறார், பசுபதி மாட்டிக்கொண்டார்.