தமிழ் சினிமா, ரசிகர் அரசியல் மற்றும் புகழ் வியாபாரம் ஆகியவை எப்போதும் விவாதங்களுக்கு இடமளித்து வருகின்றன. சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், TVK தலைவர் விஜய் குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது உரையில் அஜித், ரஜினி பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.
சீமான் உரையின் முக்கிய அம்சம்:
சீமான் தனது உரையில், “உச்சத்தை, வருமானத்தை விட்டுட்டு வந்தியா? உன்ன வா-னு எவனாச்சும் கூப்பிட்டானா? என் அன்பு சகோதரர் அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. அவரு கூட அரை சீட்டு தான் ஆனா நீ முழுசீட்டு பாத்து படிக்கிறியேடா” என்று தெரிவித்தார். இந்த கருத்து நேரடியாக TVK தலைவர் விஜய்க்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் மற்றும் TVK – அரசியல் பயணம்:
விஜய் நடத்திய சமீபத்திய மாநாடு பெரும் திரளான ஆதரவாளர்களை ஈர்த்தது. அந்த மாநாட்டில் விஜய், கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர்களின் முன்னேற்றம் போன்ற பல அம்சங்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார். அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜயின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், தமிழக அரசியலில் முக்கிய புகைச்சலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அஜித், ரஜினி – புகழை வியாபாரம் செய்யாதவர்:
சீமான் குறிப்பிட்டது போல, அஜித் குமார் தனது புகழை ஒருபோதும் அரசியல் அல்லது வணிக வளர்ச்சிக்காக பயன்படுத்தவில்லை. ரசிகர் மன்றத்தையே கலைத்து, ஒவ்வொருவரும் தனித்தனியாக முன்னேற வேண்டும் என்று அறிவித்தவர். இதன் மூலம், அஜித் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல தலைமுறைகளின் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். அரசியலுக்குள் வருவதில் பல முறை தயக்கம் காட்டியிருந்தாலும், தனது புகழை வணிகமாக்க விரும்பவில்லை என சீமான் வலியுறுத்தினார்.
“அரை சீட்டு – முழு சீட்டு”
சீமான் தனது பேச்சில் பயன்படுத்திய “அரை சீட்டு – முழு சீட்டு” என்ற உவமை, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூட அரை சீட்டுதான் ஆனா நீ முழு சீட்டையும் படிக்கிறனு கூறினார். அரை சீட்டு என ஸ்டாலினையும் முழு சீட்டு என விஜய்யை வைத்து காமெடி பண்ணிவிட்டார்.
சீமான் கூறிய கருத்துகள் Twitter, Facebook, Instagram, YouTube போன்ற தளங்களில் வேகமாக பரவுகின்றன. விஜய் ரசிகர்கள் சீமானின் கருத்தை கண்டித்துக் கொண்டிருக்க, அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் அவருடைய கருத்தை வரவேற்கின்றனர். குறிப்பாக, சமீபத்திய விஜய் மாநாடு மிகுந்த வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இந்த கருத்துகள் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.