Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், எல்லா பிரச்சனையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விஜய் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று சந்தோஷத்தில் இருக்கிறார். குமரன் நவீன் கூட பேசிக் கொண்டிருக்கும் பொழுது காவிரி பழைய ஞாபகங்களை யோசித்துப் பார்க்கும் விதமாக விஜய் உடன் இருந்து பேசி தருணங்களை யோசித்துப் பார்க்கிறார்.
அப்பொழுது வெண்ணிலா அந்த இடத்திற்கு வந்த நிலையில் சரியான நேரத்தில் நீ மட்டும் உண்மையை சொல்லவில்லை என்றால் விஜய் இன்னும் வெளி வந்திருக்க முடியாது என்று காவேரி சொல்கிறார். அதற்கு வெண்ணிலா நீ தான் எனக்கு விஜயை விட்டுக் கொடுப்பேன் என்று குழந்தை மீது சத்தியம் பண்ணி இருக்கிறாய். அப்படி இருக்கும் போது நான் ஏன் பொய் சொல்ல போகிறேன் என்று சொல்கிறார்.
அத்துடன் நீ சொன்னபடி எனக்கு விஜய் விட்டுக் கொடுப்ப தானே என்று மறுபடியும் வெண்ணிலா, காவேரியிடம் கேட்டார். அதற்கு காவேரி, இனி விஜய் காவேரி இல்லை என்று சொல்லிவிட்டு அந்த வீட்டிலிருந்து கிளம்புவதற்கு தயாராகி விட்டார். அப்படி குமரன் மற்றும் நவீனை கூட்டிட்டு போகும் பொழுது விஜய், காவேரியை கூப்பிட்டு பேசுவதற்கு முயற்சி எடுக்கிறார்.
அனல் காவேரி விஜய் கூப்பிட்டு போகாமல் பேசவும் விருப்பம் இல்லாத போல் முகத்தை காட்டி விடுகிறார். இதனால் விஜய், என்ன ஆச்சு காவிரிக்கு என்று யோசிக்கிறார். பிறகு வெண்ணிலா காவிரி சொன்னதை யோசித்துக்கொண்டு வீட்டிற்குள் போகிறார். ஆனால் காவிரி இல்லை என்றதும் விஜய் முகம் வாடியது பார்த்து விடுகிறார். அதனால் வெண்ணிலா விஜயை விட்டுக் கொடுப்பதற்கு தயாராகி விட்டார். இருந்தாலும் கடைசி நிமிடம் வரை குழப்பத்திலேயே வெண்ணிலா இருக்கிறார்.