Vijay : விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பிரபலமான தாடி பாலாஜி, இப்போது அரசியல் களத்தில் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்து, கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று வந்தவர், திடீரென ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
“முதலில் விஜய்யை காப்பாத்தணும்” என்ற அவரது பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகி, தவெகவில் உள்ள பதவி மோதல்கள் குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது.தவெக கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து, தாடி பாலாஜி தன்னை ஒரு உண்மையான விஜய் ரசிகராகவும், தொண்டனாகவும் காட்டிக்கொண்டார்.
பதவி வழங்காத TVK
ஆனால் தவெகவில் முக்கிய பதவிகளுக்கு ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டபோது, தாடி பாலாஜிக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. இதுதான் அவரது அதிருப்திக்கு காரணமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
தாடி பாலாஜியின் சர்ச்சை பேச்சு
இதனால் தாடி பாலாஜி பதவி ஆசைப்பட்டு ஏமாற்றத்தில் இருக்கிறார் என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் இதற்கு பதிலளித்த பாலாஜி, நான் பதவிக்காக வேலை செய்யவில்லை. விஜய்யின் முடிவு எப்போதும் சரியாக இருக்கும். எனக்கு என்ன தர வேண்டும் என்று அவருக்கு தெரியும் என்று தெளிவாக பேசினார்.
ஆனால் தற்போது விஜய்யுடன் இருப்பவர்களிடமிருந்து முதலில் அவரை காப்பாற்ற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.இப்பதிவு பற்றி வழங்கப்பட்ட பேட்டியில், “முதலாவது மாநாட்டின் பேச்சு பயங்கரமாக இருந்தது.
அதிருப்தியில் தாடி பாலாஜி
ஆனால் இரண்டாவது மாநாட்டின் பேச்சு எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். கவின் ஆணவக் கொலை வழக்கு, அஜித் கொலை வழக்கு போன்றவைகளையும் விஜய் மாநாட்டில் பேசியிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியை விமர்சித்து தான் பேசுகிறார். இது தனக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்.
முடிவு
இதன் மூலம், அவரது கருத்து அரசியல் சூழல் மற்றும் கட்சித் தலைவர் விஜய்யின் பேச்சின் தரம் ஆகியவற்றை பற்றிய விமர்சனமாகவும், அவருக்கு உயர்பட்ட முறையில் பதவிகள் கிடைக்காமல் இருப்பதில் ஏற்பட்ட அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது.