Karthi : நடிகர் கார்த்தி அவர்கள் நிறைய நடிப்பது போலவே யாருக்கும் தெரியாது, ஆனால் இவர் நடித்த நிறைய படங்கள் வசூலை அள்ளி குவித்து வைத்திருக்கின்றன. இவர் நடித்த அத்தனை படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இவர் நடிப்பில் லோகேஷ் எடுத்த கைதி படம்தான் லோகேஷையும் கார்த்தியையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. அப்படிப்பட்ட கார்த்தியை வைத்து பெரிய படம் செய்வதை கனவாக வைத்துக்கொண்டு சுற்றுகிறார் லோகேஷ்.
இதே போல் தற்போது “வலைப்பேச்சு” பிஸ்மி கூறியிருக்கும் தகவல் என்னவென்றால், கார்த்தியை வைத்து மிகப்பெரும் படமாக கைதி-2 வை எடுக்கப்போவதாக லோகேஷ் முடிவெடுத்துள்ளதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.
Silent-ஆக காயை நகர்த்திய கைதி
அதுமட்டுமல்லாமல் கைதி -2 போன்ற பெரிய படத்தை நடித்துவிட்டு, எப்படி திரும்ப எப்போதும் போல சாதாரண படத்தில் நடிப்பது என கார்த்தியும் பான் இந்திய நடிகராக வேண்டும் என்று திட்டம் தீட்டி விட்டாராம். கைதி-2 க்கு பிறகு இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கதை கேட்டுள்ளாராம். இந்த படங்களில் நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.
இவ்வாறு எந்த ஆரவாரமும் இல்லாமல் கார்த்தி தனது ராஜதந்திர வேலைகளை பார்த்து வருகிறாராம். அதாவது கார்த்தி பான் இந்திய நடிகராக அமைதியாக திட்டம் தீட்டுகிறார். தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது என வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.
கைதி-2 க்கு அப்புறம் கார்த்தியின் தரம் வேற லெவெலுக்கு போய்விடுமாம். அஜித், விஜய்யெல்லாம் கீழே தள்ளி no.1 நடிகராக வலம் வரப்போகிறார் கார்த்தி என திரை வட்டாரங்கள் பேசி வருகிறார்களாம். எதுவாக இருந்தாலும் கைதி-2 படம் வெளிவந்தால் தெரிந்துவிடும் எனவும் பேசிக்கொள்கிறார்களாம்.