Vijay : விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார் என்ற செய்தி கேட்டதுமே அடுத்த விஜய், சிவகார்த்திகேயன் தான் என்ற செய்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமாவில் விஜயின் இடம் யாரும் தக்க வைக்க முடியாத அளவிற்கு பெரிய இடம்தான். சோர்ந்து போகாத முயற்சி, கடும் உழைப்பு, தனக்கென்று ரசிகர்கள் கூட்டம் இதெல்லாம் ஒரு நடிகனுக்கு சாத்தியம் என்றால் அது விஜய்க்கு மட்டும் தான்.
நேரத்தை விட்டு விடாமல் படத்தை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பவர் விஜய் என்று பெயர் வாங்கினார். இவரது இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
சினிமாவில் கால் பதித்தார்..
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார். தனது அப்பா பாணியை பின்பற்றாமல் சற்று வித்தியாசமாக இருக்கும் இவர், விஜயின் தீவிர ஃபேன் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த விஜய் யார்..?
அடுத்த விஜய் யார் என்று இயக்குனர் விக்ரமன் கிட்ட கேட்ட போது..
“விஜய் சினிமா வேண்டாம் என்று விலகி விட்டார். தல அஜித்தும் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். விஜயகாந்த் தற்போது உயிரோடு இல்லை.
விஷால் இடைவெளி விட்டு தான் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படி அனைத்து முக்கிய ஆக்ஷன் கதாநாயகர்களும் பிஸியாக இருக்கும் வேளையில், தற்போது சூர்யா சேதுபதி தான் விஜயின் இடத்தை நிரப்ப முடியும் என நான் நினைக்கிறேன்- இயக்குனர் விக்ரமன்”.
இப்படி இயக்குனர் விக்ரமன் பேசியது ஒருவேளை சூர்யா சேதுபதிக்கு கொடுக்கப்படும் அடுத்த பட வாய்ப்புக்காக இப்படி பேசுகிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்படுகிறது.