Vijay : சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகர் தற்போது அரசியலில் குதித்து இருப்பது 2026 அரசியலிலை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ரசிகர்களுக்கு ஒரு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது தற்போது விஜய் அரசியலில் நுழைந்தது.
சினிமாவில் இருந்த போதும் கூட நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்காத விஜய் தற்போது தவெக கட்சியை ஆரம்பித்த பிறகு, இவருக்கு எதிராக பல நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தது. அதையெல்லாம் தனது அமைதியால் கடந்து வருகிறார் விஜய்.
விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியதில் இருந்து, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக பல சமூக உதவிகளை செய்து வருகிறார். அவர் ஆரம்பித்த த.வெ.க கட்சி அரசியல் வேலைத் திட்டங்கள் மட்டுமல்ல, நேரடி சமூக சேவைகளையும் முன்னிலைப் படுத்துகிறது.
விஜய் எடுத்த முடிவு..
சினிமாவில் இருந்த விஜய் அரசியலுக்குத் தேவை எதுவும் எதிர்பாராது நிறைய ஆதரவுகள் கிடைத்தது. இதை பார்த்த அதிமுக முதல் கொண்டு பாஜக வரைக்கும் அனைவரையும் தங்களது கட்சியில் இணையுமாறு கேட்டுக் கொண்டனர்.
நாள் செல்ல செல்ல விஜையிடம் கெஞ்சவே ஆரம்பித்து விட்டனர். அரசியலில் பல வருடங்களுக்கு மேலாக இருந்த கட்சிகள் தற்போது வந்த ஒரு சினிமாக்காரனிடம் எப்படி கெஞ்சுகிறது என்று பல விமர்சனங்கள் இதற்கு எதிராக எழுந்தது.
எவ்வளவுதான் கெஞ்சியும் நான் தனித்து தான் அரசியலில் நிற்பேன் என்று முடிவெடுத்து விட்டார் விஜய். விஜய்க்கு ஆதரவாக பல தொண்டர்கள் ஒன்று கூடினர். இதில் இளம் பெண்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
எதிர்க்கட்சியின் அழைப்பு..
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் இணைய தவெக மற்றும் நா.த.க விற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். திமுகவை எதிர்த்து நிற்பவர்கள் இந்த கட்சியில் இணையலாம் என்று கூறியிருக்கிறார். இது அதிமுகவின் சதி திட்டமாக கருதப்படுகிறது.