Vijay : சினிமாவில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்த விஜய் திடீரென அரசியலில் குதித்தது ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.
தொடர்ந்து பல ஹிட் படங்களையும், ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தையும் பிடித்து வந்த விஜய், மேன்மேலும் சினிமாவில் வளருவார் என்று எதிர்பார்த்த நிலையில் 69 ஆவது படம் தான் இறுதிப் படம் என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
சினிமாவிலேயே அவ்வளவு ரசிகர்களை கூட்டத்தை வைத்திருந்த விஜய்க்கு, அரசியலிலும் ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிமுக, திமுக இந்த இரு கட்சிகளுக்குள் நிலவி வந்த நிலையில் தற்போது இந்த இரண்டு கட்சியும் விஜய்யை பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
2026 தேர்தலில் விஜய் ஜெயித்து விடுவாரோ ஒருவேளை கூட்டணி போட்டால் நம்ம பாஜக ஜெயித்து விடும் என்ற எண்ணத்தில் பாஜக விஜயிடம் எங்களுடன் கூட்டணி போடுங்கள் என்று கெஞ்சியது. ஆனால் விஜய் தனி கட்சியாக தான் இருப்பேன் என்று மறுத்துவிட்டார்.
பவன் கல்யாண் மாதிரி விஜய் இல்லை..
விஜய்க்கு துணை முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் கட்சியை விட்டுக் கொடுப்பாரா?
இந்த கேள்விக்கு வலைபேச்சு பிஸ்மி அளித்த பதில் தான் இப்பொது வேகமாக பரவி வருகிறது.
“விஜய் என்பவர் பவன் கல்யாண் அல்ல. பவன் கல்யாண் தான் சேகுவாரா திரைப்படத்தை போட்டுட்டு ஆட்சிக்கு வந்துட்டு இப்போ சாமியார் மாதிரி அலைந்துகொண்டு இருக்காரு. அவர் வேண்டுமானால் பதவி மற்றும் பணத்திற்காக அவரது கொள்கையை மாற்றிக் கொள்ளலாம். விஜய் நிச்சயம் அவரது கொள்கையில் இருந்து விலக மாட்டார்- பத்திரிகையாளரின் கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த ஜெ பிஸ்மி”.