Vijay : விஜய்யின் குடும்ப பிரச்சினை தான் சமீபகாலமாக பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதாவது விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதுவே மேலும் சர்ச்சையை அதிகப்படுத்த, இந்த செய்தி புகைந்து கொண்டே இருக்கிறது. விஜய்யும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்கதை ஆக்கி வருகிறார். இந்த சூழலில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் விஜய்யின் நண்பன் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய சஞ்சீவ் நான் மற்றும் தனது நண்பர்கள் அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருக்கிறோம். சங்கீதா மற்றும் விஜய் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வசித்து வருகிறார்கள். மேலும் எங்களுக்கு சங்கீதா தான் சமைத்து கொடுப்பார்.
விஜய்யின் குடும்ப வாழ்க்கை பற்றி பேசிய நண்பன்
மேலும் அவரது சமையல் மிகவும் அருமையாக இருக்கும். மகளின் படிப்புக்காக தான் அவ்வப்போது சங்கீதா லண்டனுக்கு சென்று வருகிறார். மற்றபடி சென்னையில் விஜய்யின் வீட்டில் ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்ற சஞ்சீவ் கூறி இருக்கிறார்.
மேலும் விஜய் தன் குடும்பத்தை வெளியுலகத்திற்கு காட்ட விரும்பவில்லை. அதனால் தான் இதுபற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார் என்றும் சஞ்சீவ் கூறியுள்ளார். அவரது ரசிகர்கள் முதல் பலரும் இந்த விஷயத்தில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஜேப்பியார் பேத்தி திருமண விழாவில் கூட விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தனித்தனியாக தான் கலந்து கொண்டார்கள். ஆகையால் சஞ்சீவ் சொல்லுவதெல்லாம் நம்பர மாதிரி இல்லை என்ற கமெண்ட்கள் தான் வருகிறது.