விஜய் கேரியரில் டாப் 10 கலெக்சன் படங்கள்.. உச்சத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட துப்பாக்கி! – Cinemapettai

Tamil Cinema News

Vijay: நடிகர் விஜய் இன்று தன்னுடைய 51 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அது மட்டும் இல்லாமல் இந்த வருடத்தோடு சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று மக்கள் பணியில் அரசியல் களம் காண இருக்கிறார். பத்து வயதில் தொடங்கிய திரைப்பயணம் 40 வருடமாக சினிமா துறையில் இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கடந்த பத்து வருடங்களாக பாக்ஸ் ஆபீஸ் கிங்மேக்கர் ஆக இருக்கிறார். அவருடைய சினிமா கேரியரில் அதிக வசூலை பெற்ற 10 படங்களை பற்றி பார்க்கலாம்.

டாப் 10 கலெக்சன் படங்கள்

லியோ: இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ. இந்த படத்தின் பட்ஜெட் 225 கோடியாக இருந்த நிலையில், 618 கோடி வசூல் செய்திருக்கிறது.

தி கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படம் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. 350 கோடிக்கு உருவான இந்த படம் 460 கோடி வசூல் செய்து இருக்கிறது.

பிகில்: அட்லி மற்றும் விஜயின் ஹேட்ரிக் கூட்டணியில் உருவான படம் பேகில். 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 304 கோடி வசூலை அள்ளியது.

வாரிசு: நான்காவது இடத்தில் வாரிசு திரைப்படம் இருக்கிறது. இந்த படம் 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 303 கோடி வசூல் செய்தது. இந்த படம் அஜித் குமாரின் துணிவு படத்துடன் மோதியது குறிப்பிடத்தக்கது.

மெர்சல்: விஜய் மற்றும் அட்லியின் கூட்டணியில் இரண்டாவது முறை உருவான படம் மெர்சல். இந்தப் படம் வசூல் வேட்டையாடி ஒட்டு மொத்த தமிழ் திரை உலகையும் ஆட்டம் காண வைத்தது. 120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் பல சர்ச்சைகளுக்கு நடுவே 257 கோடி வசூல் செய்தது.

சர்க்கார்: துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் சர்க்கார் திரைப்படத்தின் மூலம் விஜய் உடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியில் உருவான இந்த படத்தின் பட்ஜெட் 120 கோடியாக இருந்த நிலையில் வசூல் 253 கோடியை அள்ளியது.

மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் ஒரு மேஜிக்கை உருவாக்கியது என்று தான் சொல்ல வேண்டும். விஜய் மற்றும் விஜய் சேதுபதி காம்போவில் 130 கோடிக்கு உருவான இந்த படம் 243 கோடி வசூல் அளித்தது.

பீஸ்ட்: இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் விஜய் அவரை நம்பி கொடுத்த படம் தான் பீஸ்ட். 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் விஜய்யின் நம்பிக்கையை கிடைக்காமல் 235 கோடி லாபம் கொடுத்தது.

தெறி: விஜய் மற்றும் அட்லியின் ப்ரோமன்ஸ் (Bromance) கெமிஸ்ட்ரியில் முதல் முறை வெளியான படம் தான் தெறி. 75 கோடியில் உருவான இந்த படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு 153 கோடி லாபம் கொடுத்தது.

துப்பாக்கி: நடிகர் விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங் மேக்கராக மாறுவதற்கு பிள்ளையார் சுழி போட்ட படம் துப்பாக்கி. சுமார் 70 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 127 கோடி வசூல் செய்தது. மேலும் இந்த படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.