Priyanka Mohan : டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்தான் நடிகை பிரியங்கா மோகன். இப்போது ஜெயம் ரவியுடன் பிரதர் மற்றும் ராகவா லாரன்ஸ் உடன் பென்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக அவரைப் பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் அவர் போடும் போஸ்ட்டுகள் இணையத்தில் ட்ரோல் மற்றும் மீம்ஸ் செய்யப்பட்டு வருகிறது. அதோடு அவருடைய நடிப்பு திறமை வைத்தும் கிண்டல் அடித்து பதிவுகள் வருகிறது. இவ்வாறு அவருடைய தனிப்பட்ட தாக்குதலுக்கு காரணமாக சில விஷயங்கள் கூறப்படுகிறது.
அதாவது பிரியங்கா மோகன் ஆரம்பத்தில் விஜய்யின் பி ஆர் மேலாளரான ஜெகதீஷ் நடத்திவரும் The Route என்ற நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தின் கீழ் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, மமீதா பைஜூ ஆகிய நடிகைகளின் பணிகளை இந்த நிறுவனம் தான் கவனித்து வருகிறது.
பிரியங்கா மோகனுக்கு பிஆர் நிறுவனத்தால் வந்த பிரச்சனை
இந்த சூழலில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிரியங்கா மோகன் இந்த நிறுவனத்தை விட்டு விலகி விட்டார். மேலும் வேறு ஒரு பிஆர் நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். அதன் பிறகு தான் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி எதிர்மறையான விஷயங்கள் பரவி வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் இதற்கு காரணம் விஜய் மற்றும் அவரது பிஆர்ஓ ஜெகதீஷ் தலையீட்டின் காரணமாக பிரியங்காவை பற்றி தவறான விஷயங்கள் பரப்பி வருவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. மேலும் இதனால் பிரியங்காவுக்கு இப்போது பட வாய்ப்புகளும் பெரிய அளவில் கிடைக்கவில்லை.
இதற்கெல்லாம் காரணம் பிஆர் மாற்றம் தானா என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. மேலும் தன்னை பற்றி ட்ரோல் மற்றும் மீம்ஸ்கள் தொடர்ந்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தனது வேலையை பிரியங்கா மோகன் செய்து கொண்டிருக்கிறார்.