Vijaysethupathi : மக்கள் செல்வன் என்று அன்பால் ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் நடிப்பை விவரிக்க எந்த ஒரு வார்த்தையும் போதாது.
ஒரு காலத்தில் துணை கதாபாத்திரத்தில் ஒரு ஓரமாக நின்று நடத்திக் கொண்டிருந்த விஜய் சேதுபதி இன்று மெயின் கதாபாத்திரத்தில் அனைவரையும் அசர வைப்பது மிகவும் ஆச்சரியம் தான். பல ஹீரோயின்கள் விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விஜய்சேதுபதி தொடங்கிய புது கேம்..
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் தலைவன் தலைவி என்ற திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி தேதி தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் காம்போ எப்படி இருக்க போகிறது என்று ஆர்வத்துடன் இருக்கின்றனர் ராசிகள்
படம் வருவதற்கு முன்னாடியே விஜய் சேதுபதி ரசிகர்கள் வலைத்தளங்களில் பாட்டு, படத்தில் உள்ள சின்ன சின்ன சீன்களை பறக்க விட்டனர். படத்தின் டிரைலரை பார்த்தாலே தெரிகிறது படம் வேற லெவலில் ஹிட் கொடுக்கப் போகிறது.
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் அவர்களது உணவகங்களை நடத்திக் கொண்டு வருகின்றனர். இடையில் ஏற்படும் சின்ன சின்ன உணர்வுகளில் சண்டைகள், காதல் காட்சிகள் எல்லாம் பயங்கரமாக இயக்கப்பட்டிருக்கிறது.
இறுதியில் இருவரும் கொத்து பரோட்டா தயாரிப்பில் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையில் யோகி பாபுவின் காமெடி கதாபாத்திரம் திரைக்கு வரவேற்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெடிக்கை குண்டு எதிரிகள் போடுவதால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். பல சிக்கலான காட்சிகளுடன் படம் நகருகிறது. இப்படி மக்கள் விரும்பும் பல பல ட்விஸ்ட்களுடன் “தலைவன் தலைவி” முழுவதும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக வருகிற ஜூலை 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.