Vijay Sethupathi-Surya: விஜய் சேதுபதி மகன் பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். முதல் படம் என்பதால் சில நிறை குறைகள் அவருடைய நடிப்பில் இருக்கிறது.
ஆனால் அதையும் தாண்டி அவர் கடந்த சில நாட்களாக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதற்கு முக்கிய காரணம் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பபுள்கம் மென்று கொண்டே பிறரிடம் பேசுவதும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுமாக இருந்தார்.
உடனே இணையவாசிகள் முதல் படத்திலயே இவ்வளவு திமிரா என அவரை மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்தனர். அதேபோல் இப்பவே இவ்வளவு ஆட்டிடியூட் இருந்தா சினிமாவுல நீடிக்க முடியாது என்ற விமர்சனங்களும் எழுந்தது.
மன்னிப்பு கேட்டும் கூட விடாத சோசியல் மீடியா
தொடர்ந்து வந்த இந்த விமர்சனங்களால் சூர்யா தற்போது அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே இன்றைய காலத்து பிள்ளைகள் இப்படி இருப்பது சகஜம் தான். எதற்காக சின்ன பையனை இந்த அளவுக்கு ட்ரோல் செய்ய வேண்டும் என அவருக்கு ஆதரவான கருத்துக்கள் எழுந்தது.
தற்போது அவர் மன்னிப்பு கேட்ட நிலையில் இந்த விஷயம் அப்படியே முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு தான் இன்னும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
உண்மையில் ஒருவரை பற்றி தெரியாமல் ஒரு சம்பவத்தை வைத்து அவரை எடை போட முடியாது. விஜய் சேதுபதியின் யதார்த்தமான குணம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவருடைய மகன் மீது இந்த அளவுக்கு வன்மம் ஏன்.
படத்தையும் அவருடைய நடிப்பையும் மட்டும் விமர்சிக்க வேண்டும். அதை தாண்டி ஒருவரை காயப்படுத்துவது நிச்சயம் சரி கிடையாது. இது அவருடைய குடும்பத்தையும் மனரீதியாக பாதிக்கும்.
சோசியல் மீடியா நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது வன்மத்தை கொட்டும் இடமாக தான் அது இருக்கிறது. இப்படி ட்ரோல் செய்யும் அளவுக்கு சூர்யா பெரிய குற்றம் செய்யவில்லை.
முதல் படம் என்பதால் ஒரு பதட்டம் நிச்சயம் இருக்கும். அதன் காரணமாக அவர் நடந்து கொண்டது மாபெரும் தவறு கிடையாது என்பதே இப்போது அனைவரின் கருத்தாக உள்ளது.