Vijay Tv Serial: விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 சீரியலுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் புது சீரியல்கள் அடுத்தடுத்து வரிசையில் இருப்பதால் பழைய சீரியல்களையும், டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளை பெரும் சீரியலை முடிப்பதற்கும் விஜய் டிவி தயாராகிவிட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் இரண்டு சீரியல்கள் புதுசாக வரப்போகிறது.
இதில் தங்கமகள் என்ற சீரியல் முடிய போகிறதால் அதற்கு பதிலாக தினமும் 3.30 மணிக்கு புத்தம் புதுசாக மகளே என் மருமகளே என்ற சீரியல் வரப்போகிறது. இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆரம்பமாகப் போகிறது. இதனைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலும் முடியப்போவதால் இதற்கு பதிலாக க்ளோபல் வில்லேஜ் நிறுவனம் தயாரிக்கும் தனம் பாக்கியம் என்ற சீரியல் வருவதாக இருந்தது.
ஆனால் சில காரணங்களாக இந்த சீரியலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போடுவதால் அதற்கு பதிலாக விஜய் டிவியின் பேவரைட் சீரியலாக இருக்கும் நாடகத்தின் நேரத்தை மாற்றுகிறார்கள். அதாவது 7மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் முடிய போகிறது. அதனால் இந்த நேரத்தில் மகாநதி சீரியலை கொண்டு வரப் போகிறார்கள்.
அத்துடன் 7.30 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஆரம்பமாகி 8.15 வரை முடிக்க போகிறார்கள். அடுத்ததாக 8.15 மணியிலிருந்து 9 மணி வரை அய்யனார் துணை சீரியலை கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் புது சீரியல் வரும் வரை தான் அதனால் கிட்டத்தட்ட ஒரு இரண்டு வாரங்கள் மட்டுமே இந்த மாற்றங்கள் இருக்கும்.
அதன் பிறகு தனம் பாக்கியம் என்ற சீரியல் வந்ததும் 7 மணிக்கு மகாநதி, 7.30 மணிக்கு தனம் பாக்கியம், 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, 8.30 மணிக்கு அய்யனார் துணை என்று வழக்கம்போல் சீரியல் ஆரம்பித்து விடும். தற்போது இந்த மூன்று சீரியல் தான் விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியலாக போட்டி போட்டு வருகிறது.