விஜய் டிவியின் 4 சீரியல்களை முடிக்க சொல்லி தூக்கிய போர் கொடி.. பொன்னி சீரியலுக்கு பிறந்த விடிவு காலம் – Cinemapettai

Tamil Cinema News

Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களை மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பார்க்கவே மாட்டோம் என்று பிரமோவை மட்டும் பார்த்து வருகிறார்கள். அதனால் டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளை பெற்று விடுகிறது. இருந்தாலும் அந்த சீரியல்களை வருஷ கணக்கில் ஓட்டிட்டு வந்து விடுவார்கள்.

அப்படித்தான் பொன்னி சீரியல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 570 எபிசோடு தாண்டிய நிலையில் நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதுவரை இந்த சீரியலில் ஒரு எபிசோடு கூட பார்க்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இது ஒரு கிரின்ச் சீரியல் ஆகவும், கதையே இல்லாமல் நடிப்பும் இல்லாமல் ஏதோ ஒரு சீரியல் ஓடுகிறது என்று மக்களிடம் விமர்சனங்களை பெற்று வந்தது. அப்படிப்பட்ட இந்த சீரியலை முடித்ததும் மக்கள் சந்தோஷத்தில் பொன்னி சீரியலை முடித்த மாதிரி இன்னும் நான்கு சீரியல்களை முடித்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

அப்படி முடிக்க சொல்லி போர் கொடி தூக்கும் சீரியல்கள் எதுவென்றால் பாக்கியலட்சுமி, சக்திவேல், சின்ன மருமகள் மற்றும் கண்மணி. இந்த சீரியல்களை கொஞ்சம் கூட பார்க்க முடியவில்லை.ஆனாலும் பிரைம் டைமிங் போட்டு கடுப்பேற்ற வேண்டாம்.

அதற்கு பதிலாக இந்த சீரியல்களை முடித்துவிட்டு நல்லா போகிற சீரியல்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் ஓகே அல்லது புதுசாக கொண்டு வந்தாலும் ஓகே என்று மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் 1000 எபிசோடு தாண்டிய நிலையில் இழுத்து அடித்துக் கொண்டு வருகிறார்கள். அதனால் முதலில் இந்த சீரியலாவது முடித்து விடுங்கள் என்று மக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.