Mysskin: பெரிய திரை பிரபலங்கள் எல்லாம் இப்போது சின்னத்திரை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். மார்க்கெட் குறைந்தால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் நடுவராக வந்து உட்கார்ந்து விடுகிறார்கள்.
அப்படித்தான் விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மிஷ்கின் நடுவராக இந்த சீசனில் களமிறங்கியுள்ளார். இது எல்லோருக்கும் ஆச்சர்யம் தான்.
அந்த ப்ரோமோ கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விஜய் டிவியின் நிலைமை தான் அந்தோ பரிதாபம். சாதாரணமாகவே மிஸ்கின் ஒரு பேட்டி கொடுக்கப் போனால் ஒரு நிலையில் உட்கார மாட்டார்.
அப்படி இப்படி என சேட்டை செய்து கொண்டிருப்பார். அப்படித்தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் ஒரு பக்கமாக உட்காராமல் கேமரா மேனுக்கு டென்ஷன் கொடுத்திருக்கிறார்.
சூப்பர் சிங்கர் செட்டில் செய்த அலப்பறை
இவர் செய்த அலப்பறையை பார்த்து கேமராவை எந்த கோணத்தில் வைத்து அவரை படம் பிடிப்பது என்ற குழப்பமே அவர்களுக்கு வந்து விட்டதாம். சரி அது போகட்டும் நிகழ்ச்சியாவது சுவாரஸ்யமாக இருந்ததா என்று கேட்டால் படபடப்புடன் தான் நடந்திருக்கிறது.
என்னவென்றால் பாட்டு பாடியவர்களை பற்றி நாலு வார்த்தை பேசாமல் பின்னால் ஆடிக்கொண்டிருந்த குரூப் பற்றி பேசி இருக்கிறார். அதில் ஒரு பெண் நன்றாக ஆடிய நிலையில் அவரை கூப்பிடுங்கள் என மேடைக்கு வரவழைத்து பாராட்டி இருக்கிறார்.
இத்தனைக்கும் டான்ஸ் ஆடி முடித்துவிட்டு அந்த பெண் சென்று விட்டாராம். மிஷ்கின் கொடுத்த தொல்லையால் அவரை கண்டுபிடித்து மேடைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அந்த பெண்ணை பாராட்டியதோடு வாய்ப்பு தருவதாகவும் கூறி மற்ற நடுவர்களையும் அவஸ்தைக்குள்ளாக்கி இருக்கிறார்.
இந்த காட்சிகளை எல்லாம் ஷோவில் காட்டலாமா இல்லை எடிட் செய்து தூக்கி விடலாமா என்ற யோசனையில் இப்போது சூப்பர் சிங்கர் டீம் இருப்பதாக சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.