VJ Manimegalai: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி என்று ஒரு சொலவடை உண்டு, அதுபோல்தான் மணிமேகலை விஜய் டிவியில் ஒரு போட்டியாளராக குக் வித் கோமாளியில் பங்கேற்றார். அதன் பின் கனவை நிறைவேற்றும் விதமாக சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக கலந்து கொண்டார். அந்த சீசனில் போட்டியாளராக பங்கு பெற்ற பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டது.
இதனால் விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து பிரியங்காவிற்கு சப்போர்ட் பண்ணிய நிலையில் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்தும் சேனலில் இருந்தும் அதிரடியாக வெளியேறி விட்டார். இதனால் ஏகப்பட்ட பஞ்சாயத்துகளும் சர்ச்சைகளும் ஆன பொழுது மணிமேகலைக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதில் எல்லோரும் பாராட்டும் படி பார்ப்பவர்களை என்டர்டைன்மென்ட் செய்து பெஸ்ட் தொகுப்பாளனி என்ற விருதை வாங்கும் அளவிற்கு மணிமேகலை பேரையும் புகழையும் சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. மணிமேகலைக்கு மிகப்பெரிய லட்சியமே தொகுப்பாளனியாக ஆக வேண்டும் என்று தான்.
அதனால் தான் விஜய் டிவியில் பல வருடங்களாக உருட்டி வந்தார், கடைசியில் அந்த சான்ஸ் கிடைக்கும் பிரியங்காவால் அது பாதியிலேயே முடிந்து போய்விட்டது. இதனால் விஜய் டிவியை வேண்டாம் என்று தலைமுழுகிய பொழுது ஜீ தமிழில் இருந்து அதிர்ஷ்டம் கொட்டி விட்டது. அந்த வகையில் முதல் நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்து சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு தயாராகி விட்டார்.
அதாவது மிங்கலாக காத்திருக்கும் சிங்கிள் பசங்க ரெடி என்று சொல்வதற்கு ஏற்ப சிங்கிளாக இருக்கும் எல்லா பசங்களையும் வைத்து அவர்களுடைய திறமைகளை வெளிக்காட்டி அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது. இதை ஒன் மேன் ஆர்மியாக தொகுத்து வழங்கப் போவது மணிமேகலை தான். இந்த நிகழ்ச்சி இன்னும் கூடிய விரைவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக போகிறது.