சமீப காலமாக படங்களை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கி வருகிறது. பெரிய ஹீரோக்கள் மற்றும் அதிக பட்ஜெட் படங்களை நம்பி பெரும் தொகையை கொடுத்து நஷ்டம் அடைந்து வருகின்றனர். இப்படி மோசம் போனதால் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
படம் தியேட்டர்களிலேயே ஓடுவதில்லை, அதையும் தாண்டி மோசமான ரிவ்யூ என்றால் படம் ஓடிடியில் கூட நஷ்டம் ஏற்படுத்தி விடுகிறது. விடாமுயற்சி, வேட்டையன், இந்தியன் 2 போன்ற பெரிய ஹீரோக்களை நம்பி தயாரிப்பாளர்களும், ஓடிடி உரிமையாளர்களும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதனால் அவர்கள் புது நடைமுறை ஒன்றை பின்பற்றி வருகிறார்கள். பெரிய ஹீரோக்கள் படம் என்றால் இவ்வளவு தான் என ஒரு தொகையை நிர்ணயித்துள்ளனர். இப்பொழுது அதன் அடிப்படையில் தான் விஜய்யின் ஜனநாயகன் படத்தையும், ரஜினியின் கூலி படத்தையும் வாங்கியுள்ளனர்.
தலா இரண்டு படத்தையும் அமேசான் நிறுவனம் 125 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. இதுதான் அவர்கள் பெரிய படங்களுக்கு நிர்ணயத்த அதிகபட்ச தொகை. இதற்கு மேல் அதிக தொகைகளை கொடுத்து இனிமேல் எந்த ஒரு படத்தையும் வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
அதைப்போல் தெலுங்கு படங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் நிர்ணயத்திற்கும் அதிகபட்ச தொகை 150 கோடிகள். ஏனென்றால் அவர்கள் எடுப்பதெல்லாம் பெரிய பட்ஜெட்கள் இதனால் அவர்களுக்கு கூடுதலாக 25 கோடிகள். கன்னட படமாகிய காந்தாரா 2வை அதிகபட்ச தொகையாக125 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளனர்.