Vijay : தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாராக இருந்து தற்போது அரசியல் தளத்திலும் கால் பதித்திருக்கும் விஜய், தனது புதிய அரசியல் கட்சி மாநாட்டில் எடுத்த செல்ஃபி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ மூலம் விஜயின் சமூக வலைத்தள பின்தொடர்பவர்கள் (Followers) அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வைரல் வீடியோவின் பின்னணி தரவுகள் குறித்து சமீபத்தில் வந்துள்ள தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆதாரத்துடன் வெளியிட்ட மரியாதாஸ்..
பிரபல அரசியல் விமர்சகர் மரியாதாஸ், தனது YouTube சேனல் மூலம் இந்த விவகாரம் குறித்து வெளியிட்ட புள்ளிவிபரங்கள் ரசிகர்களிடையே பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. அவர் கூறியதாவது, விஜயின் செல்ஃபி வீடியோவுக்கு வந்த லைக்-குகளில் சுமார் 38% வடமாநிலங்களை சேர்ந்தவை என தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மத்திய பிரதேசம், பீஹார், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக லைக்குகள் பதிவாகியுள்ளன.
போலியான லைக்ஸ்..
இதன் அடிப்படையில், சிலர் இந்த லைக்குகள் இயல்பானவை அல்ல, போலி லைக்குகள் (Fake Likes) என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் #VijaySelfieVideo என்ற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகிறது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த விவகாரத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளனர்.
விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து, விஜயின் புகழ் தற்போது தென்னிந்தியாவை மட்டுமின்றி வடமாநிலங்களுக்கும் சென்றுவிட்டது என்பதால்தான் இந்த லைக்குகள் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அவரின் திரைப்படங்கள் மற்றும் அரசியல் செய்திகளும் யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் நாடு முழுவதும் பிரபலமாகி இருப்பதாக ரசிகர்கள் வாதிடுகின்றனர்.
மரியாதாஸ் வெளியிட்ட புள்ளிவிபரங்கள், சமூக வலைத்தள புள்ளிவிபர சேவைகளிலிருந்து எடுக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. அவர், “ஒரு செல்ஃபி வீடியோவுக்கே இப்படிப்பட்ட மிகப்பெரிய அளவிலான லைக்குகள் வருவது சாதாரணமல்ல. இதன் பின்னணி ஆராயப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் விஜயின் அரசியல் பயணத்துக்கும், அவரின் டிஜிட்டல் பிரசாரத்துக்கும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் செல்ஃபி வீடியோ தொடர்பான இந்த ‘போலி லைக்’ விவாதம் தற்போது தமிழ் சினிமா மற்றும் அரசியல் ரசிகர்களிடையே சூடுபிடித்த பேச்சாக மாறியுள்ளது.
நல்ல அரசியல்வாதிக்கு இது அழகல்ல..
அதுமட்டும்ல்லாமல் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு இது அழகல்ல. தன் பக்கம் கவனத்தை ஏற்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்வது என்பது நியமானது அல்ல. இப்போவே இப்படி செய்கிறார் என்றால் ஆட்சிக்கு வந்தால்? என குற்றசாட்டை முன்வைத்துள்ளார் மரியாதாஸ். அதுமட்டுமல்ல இது மாபெரும் குற்றம் என்றும், இது தவறான முன்மாதிரி என்றும் கூறியுள்ளார்.