Actor Krishna: ஸ்ரீகாந்த் சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட மருந்தை எடுத்துக் கொண்டதன் விளைவாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின் அவரை சிறையில் அடைத்த போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் தற்போது நடிகர் கிருஷ்ணாவும் சிக்கி இருக்கிறார். அவரை தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போலீஸ் கிட்டத்தட்ட 18 மணி நேரம் கேள்விகளை கேட்டு திணற வைத்துள்ளனர்.
அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய தகவலின் படி அவர் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் வந்திருக்கிறது.
ஆனால் ஒருவர் இது போன்ற மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால் 45 நாட்களுக்குள் பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த நாட்களை கடந்து விட்டால் பரிசோதனையில் தெரிய வராது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
கிருஷ்ணாவின் வாக்குமூலம்
இருப்பினும் போலீசார் அவரை விசாரித்ததில் பல விஷயங்களை அவர் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அதில் ஸ்ரீகாந்த் எனக்கு நெருங்கிய நண்பர். இருவரும் பார்ட்டிகளில் கலந்து கொள்வோம்.
அவருடைய பிரெண்ட் என்ற காரணத்தினால் நான் இந்த மருந்தை எடுத்துக் கொண்டேன் என்று நினைப்பது தவறு. எனக்கு உடல் நிலையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.
அதனால் இந்த மருந்துகளை நான் உபயோகப்படுத்துவது எனக்கு நல்லது அல்ல. அப்படி இருக்கும் போது இது தொடர்பான கும்பலுடன் எனக்கு எப்படி தொடர்பு இருக்க முடியும் என அந்த விசாரணையில் கூறியுள்ளார்.
ஆனாலும் போலீசார் தற்போது அவருடைய whatsapp சாட் ஹிஸ்டரி எல்லாத்தையும் தோண்டி துருவ ஆரம்பித்துவிட்டனர். பல வருடங்களுக்கு முன்பு பரிமாறப்பட்ட தகவல்கள் கூட ரெக்கவரி செய்யப்படும் வேலைகளும் ஆரம்பித்துவிட்டது.
அதில் கிருஷ்ணா கோட் வேர்ட் மூலம் நண்பர்களுக்கு பேசி உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் அவருடைய பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் யாருக்கு அனுப்பப்பட்டது என்ற தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இது எல்லாவற்றுக்கும் கிருஷ்ணா வேறு சில காரணங்களை கூறி இருக்கிறார். ஆனாலும் போலீஸ் இத்தோடு இந்த விஷயத்தை விட்டு விடாது. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் எதிர்பாராத விஷயங்களும் வெளிவரும் என்கின்றனர்.