முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் என்றதுமே அதன் இரண்டாம் பாகத்திற்கு அப்பவே விதை போட்டனர். ஆனால் இன்றுவரை அதற்கு மேல் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அப்படி தமிழில் வெளிவராமல் இன்னமும் கிடப்பில் கிடக்கும் 5 சூப்பர்ஹிட் செகண்ட் பார்ட் படங்கள்.
தனி ஒருவன் 2: மூன்று வருடங்களுக்கு முன்னரே இந்த படம் வெளிவரும் என அறிவிப்பு வந்தது. ஆனால் இயக்குனர் மோகன் ராஜா இப்பொழுது ஹிந்தி பக்கம் செல்ல இருக்கிறார். இதனால் இந்த படம் வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரின் சொந்த தம்பியான ரவி மோகன் இப்பொழுது குடும்பத்திலிருந்து பிரிந்து தனி ஆளாக இருக்கிறார்.
சதுரங்க வேட்டை 2: எச் வினோத்தின் முதல் படம் இது. மறைந்த காமெடி நடிகர் மனோபாலா இதை தயாரித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். படம் முடிந்தது என்ற பேச்சுக்கள் வந்தாலும் கூட இன்னும் ஏதோ பிரச்சனையில் தான் இருக்கிறது.
வடசென்னை 2: உடன்பிறவா அண்ணன் தம்பிகளான தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான சூப்பர் ஹிட் படம் வடசென்னை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் இல் இரண்டாம் பாகத்திற்கு லீடு கொடுத்திருந்தார் ஆனால் இன்னும் வெளிவரவில்லை.
கைதி 2: குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கோடிக்கணக்கில் வசூலித்தது. இதனால் இதை தயாரித்த எஸ் ஆர் பிரபு இரண்டாம் பாகம் எடுக்க திட்டம் போட்டுள்ளார். இன்றுவரை லோகேஷ் பிஸியாக இருப்பதால் இதற்கு ஒரு வழி கிடைக்கவில்லை.
சார்பட்டா பரம்பரை 2: ஆர்யாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த படம் என்று சொல்லலாம். மிகவும் இயல்பாக பா ரஞ்சித் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதையும் அடுத்த பாகம் பாகம் எடுக்க திட்டம் போட்டனர். ஆனால் இன்னமும் நடக்கவில்லை.