Memes: அஜித் நடிப்பு, கார் ரேஸ் என பிஸியாக இருக்கிறார். குட் பேட் அக்லி படத்தை முடித்த கையோடு அவர் ரேஸ் பக்கம் சென்று விட்டார். அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் அஜித்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இங்கு அப்டேட் ஆக வந்து விடுகிறது.

அப்படித்தான் தற்போது அவருடைய கார் விபத்தில் சிக்கிய வீடியோவும் வெளியாகி உள்ளது. இது அவ்வப்போது நடப்பது தான். ஆனால் அவருக்கு எந்தவித காயமும் இல்லை.

இந்த செய்தி வெளியானதை பார்த்த நெட்டிசன்கள் இதே வேலையா போச்சு. மீண்டும் வேண்டுமா இதுக்கு இல்லையா ஒரு எண்டு. அவருக்கு கார் ஓட்ட தெரியுமா தெரியாதா என கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இந்த நியூஸ் சேனலுக்கு எல்லாம் வேற வேலையே இல்ல. இதை பெரிய நியூஸா எடுத்து போட்டுக்கிட்டு இருக்காங்க. முதல் தடவைன்னா பதட்டப்படலாம். அடிக்கடி நடக்கிறதால சாதாரணமா இருக்கு எனவும் கிண்டல் அடிக்கின்றனர்.

இன்னும் சிலர் உண்மையிலேயே ரெட் டிராகனுக்கு கார் ஓட்ட தெரியுமா. டிரைவிங் லைசென்ஸ் இருக்கா என மீம்ஸ் போட்டு கலாய்கின்றனர். மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இந்த செய்தியை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இப்படி சோசியல் மீடியாவை இன்று கலக்கிக் கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.