தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத விதமாக ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக ஒரு படம் வெளியானவுடன், விமர்சகர்கள் கூறும் கருத்துகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நேரடியாக பாதிக்கும். ஆனால் இந்த முறை அந்த நிலைமை முற்றிலும் தலைகீழாகிப் போயுள்ளது!
சமீபத்தில் வெளியான கூலி படத்திற்கு விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். கதைக்களம் பலவீனமாக உள்ளது, திரைக்கதை மெதுவாக நகர்கிறது என ‘நெகட்டிவ் ரிவியூ’கள் குவிந்தன. ஆனால் ரசிகர்கள் அந்தப்படத்தை திரையரங்குகளில் பார்த்தவுடன் சமூக வலைதளங்களில் ‘மாஸ் படம்’, ‘சென்டிமென்ட் சூப்பர்’, ‘மிகுந்த ரசனை’ என பாராட்டி வருகின்றனர்.
திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரமாக குரல் கொடுத்து கொண்டாடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சில இடங்களில் கூடுதல் காட்சிகள் கேட்டு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விமர்சகர்கள் கூறும் கருத்துகளுக்கும், ரசிகர்களின் எதிர்வினைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் தற்போது விவாதமாகியுள்ளது.
சினிமா வட்டாரங்களில், “இந்தப் படம் நிச்சயம் ‘வேர்ட் ஆஃப் மவுத்’ ஹிட் ஆகும்” என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. விமர்சகர்களின் மதிப்பீடுகளை விட, ரசிகர்களின் நேரடி அனுபவம் மற்றும் உணர்ச்சியே படம் ஓட்டத்தை தீர்மானிக்கும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
சினிமா வரலாற்றில் இத்தகைய எதிர்மறை–நேர்மறை முரண்பாடு மிக அரிது. இப்போது எல்லோரின் கவனமும், “இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் எவ்வளவு தூரம் செல்வது?” என்ற கேள்வியிலேயே திரும்பியுள்ளது!
இதில் ப்ளூ சட்டை மாறனை கூட விட்டுவிடுவார்கள். அவர் அனைத்து படங்களுக்கும் இப்படிதான் விமர்சனம் பண்ணுவார். ஆனால் பிரசாந்தை இனி விடவே மாட்டார்கள். அவர் பணம் வாங்கி விமர்சனம் செய்வது இந்த முறை வெட்ட வெளிச்சமாகி விட்டது.