Sivakarthikeyan : சமீபத்தில் கிங்காங் உடைய மூத்த மகளான கீர்த்தனாவின் திருமணம் நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்களுக்கு கிங்காங் நேரில் சென்று அழைத்த நிலையில் பலரும் கலந்து கொள்ளவில்லை. வடிவேலு நேரில் வர முடியாததால் அவருடைய உதவியாளர்களை அனுப்பி ஒரு லட்சம் மொய் வைத்திருந்தார்.
இந்த சூழலில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றோர் திருமணத்திற்கு வராதது பேசு பொருளாக மாறியது. இப்போது சிவகார்த்திகேயன் நேரிலேயே சென்று மணமக்களை வாழ்த்து இருக்கிறார். கிங்காங்கின் மகள் கீர்த்தனா சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகரம்.
அவர் திருமணத்திற்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர் வராதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதை கிங்காங் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் கூறி வருத்தப்பட்டு இருந்தார். ஆனால் வீட்டிற்க்கே நேரில் வந்து சர்ப்ரைஸ் விசிட் கொடுத்திருக்கிறார்.
கிங்காங் வீட்டிற்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன்
படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் அவர் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாததாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் கிங்காங் வீட்டு திருமணத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதால் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
இதன் காரணமாக பாக்கியராஜ், தேவயானி, விஜய் சேதுபதி, மன்சூர் அலிகான் போன்ற பலர் திருமணத்திற்கு வந்துவிட்டு கூட்டத்தை பார்த்து உள்ளே செல்லாமல் திரும்பி விட்டனர். சிவகார்த்திகேயனும் இதற்காக கூட திருமணத்தை தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நேரில் சென்று வாழ்த்தியதுடன் கிங்காங் உடன் சில மணி நேரங்கள் சிவகார்த்திகேயன் பேசினார்.
மேலும் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. சிவகார்த்திகேயனை போல தொடர்ந்து பல பிரபலங்கள் திருமணத்திற்கு வர முடியாததால் நேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.