கடந்த சில மாதங்களாக ஒடிடி நிறுவனங்கள் எல்லாம் அதிக அளவு காசு கொடுத்து படங்களை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் படத்தின் பிசினஸ் பெரிய லெவலில் பாதிக்கிறது. பெரிய ஹீரோக்கள் படம் என்றால் இவ்வளவு தொகை தான் கொடுக்க முடியும் என வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசான் ஒடிடி தளங்கள் உச்ச நட்சத்திரங்கள் படங்களுக்கு 125 கோடிகள் வரை நிர்ணயம் செய்துள்ளது. விடாமுயற்சி, வேட்டையன், இந்தியன் 2, தக்லைப் போன்ற பெரிய படங்களை நம்பி அவர்கள் மோசம் போனதால் அதிரடியாக இந்த முடிவை எடுத்து விட்டார்கள்.
இப்படி ஒடிடி தளங்கள் போர்க்கொடி தூக்கி வருவதால் வெங்கட் பிரபு மற்றும் தேசிங்கு பெரியசாமி படங்களை, கமிட் செய்து விட்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள். வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் பண்ண போகிறார் அதை போல் தேசிங்கு பெரியசாமி சிம்புவை வைத்து ஒரு படத்தை தயார் செய்து வைத்துள்ளார்.
இந்த இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட 150 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப் போகிறார்கள். இதனால் இந்த பெரிய பட்ஜெட் படத்தை வியாபாரம் செய்ய முடியுமா என பல தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த படங்கள் இன்னும் ஆரம்பிக்காததற்கு காரணம்.
வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனை வைத்து மாநாடு போன்று சயின்ஸ் பிக்சன் படத்தை எடுக்கப் போகிறார். அதை போல் தேசிங்கு பெரியசாமியும் 100 கோடிக்கு மேல் பட்ஜெட் போட்டு இருக்கிறார். இதனால் சிம்பு பல தயாரிப்பாளர்களை சந்தித்து வருகிறார். துபாய் சென்று தயாரிப்பாளர் கண்ணன் ரவியை பார்த்து வந்துள்ளார். அவரும் மறுத்ததால் இந்த படத்தை இந்த படத்தை தானே தயாரிக்கவும் முன்வந்துள்ளார்.