Vishal : விஷாலுக்கு இப்போது 47 வயதாகும் நிலையில் தற்போது வரை அவருக்கு திருமணம் ஆகாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார்.
மேலும் இவர்களது திருமணம் விஷாலின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த தேதியில் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது சமீபத்தில் ரெட் பிளவர் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கலந்து கொண்டார்.
அப்போது விஷாலின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு அவர் கூறிய பதில் தான் சர்சையாக இருக்கிறது. அதாவது நடிகர் சங்க கட்டிட வேலை இன்னும் முடிவு பெறாமல் இருக்கிறது. அதை முழுவதுமாக முடிக்க இன்னும் சில காலம் தேவைப்படுகிறதாம்.
விஷால் மீது கோபத்தில் இருக்கும் தன்ஷிகா
ஆகையால் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் பணிகள் முடிவது சிரமம். ஆனாலும் அந்த கட்டிடம் முடிந்த பின்பு முதல் திருமணம் விஷாலின் திருமணம் தான் என புக் செய்து விட்டார்களாம். இப்போது கட்டிட வேலை மீதம் இருப்பதால் ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷாலின் திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
தேதியை அறிவித்த பின் திருமணம் தள்ளி போவதால் விஷால் மீது சிறிய கோபத்தில் இருக்கிறாராம் தன்ஷிகா. ஆகஸ்ட் 29 இல்லையென்றாலும் கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் விஷால், தன்ஷிகா திருமணம் கண்டிப்பாக நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பேசிய விஷால், ஒன்பது வருடம் தாக்கு பிடித்து விட்டேன் இன்னும் இரண்டு மாதங்கள் தான். அதற்குள் எப்படியும் நடிகர் சங்க கட்டிடம் தயாராகிவிடும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆகஸ்ட் 29 முக்கிய அப்டேட் இருப்பதாகவும் விஷால் கூறியிருக்கிறார்.