Vijay : “தமிழக வெற்றி கழகம்”என்னும் கட்சியை விஜய் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த கட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரும் கட்சியாக விளங்குகிறது. அதற்கு காரணம் கட்சி ஆரம்பித்தபோது விஜய்யை சாதாரணமாக எண்ணியதுதான்.
விஜய்யை எதிர்க்க வாரிசு போதும் என்று நினைத்திருந்த அந்த பெரியக்கட்சி. நாளுக்கு நாள் விஜய்க்கு அதிகரிக்கும் செல்வாக்கை பார்த்து பயந்து போய் இனி களத்தில் நான் இறங்கினால் தான் சரியாக இருக்கும் என எண்ணி, தானே விஜய்க்கு போட்டியாக இறங்க போவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.
ரூம் போட்டு யோசிக்கும் பெரியகட்சி..
விஜய் கட்சி ஆரம்பித்த போது இதெல்லாம் முக்கிய கட்சியாக மாறாது என நினைத்த அரசியல்வாதிகள் தற்பொது விஜய்யை எதிர்க்கட்சி அளவுக்கு முன்னிறுத்தி தனது திட்டங்களை தீட்டி வருகின்றன.
மதுரை மாநாடு, “ஜனநாயகன்” பட ரீலீஸ், எதிர்வரும் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் என வரிசையாக ஸ்கோர் பண்ண காத்திருக்கிறார் விஜய். இதெல்லாம் தடுப்பதற்காக ரூம் போட்டு யோசித்து வருகிறார்களாம் பெரியக்கட்சி. அதாவது மாநாடு தேதி மாற்றம், மாநாட்டில் பேசக்கூடாது என தடை விதித்தது, எண்ணலாம் பேசலாம் என லிஸ்ட் போட்டது என வனமங்கள் கூடிக்கொண்டே போகின்றது.
தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் அந்த பெரிய ப்ரோடக்சன் கம்பெனி-யை பேரனிடம் பொறுப்பில் விட்டுவிட்டு, மகன் முழு நேர வேலையாக அரசியலை செய்ய போகிறாராம். அப்பாவிற்கு பக்கபலமாக அரசியல் களத்தில் நின்று விஜய்யை ஒரு கை பார்க்கப்போகிறார்களாம்.
இவ்வாறு இவர்கள் எதிர்த்து எதிர்த்து தான் விஜய்யை வளர்த்து விட்டார்கள். இன்னும் ஏன் இப்படி செய்கிறார்கள் என அரசியல் பிரபலங்கள் பேசிக்கொள்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல் விஜய் முதலமைச்சர் ஆவதும் உறுதி எனவும் பேச்சுக்கள் எழுகின்றனவாம்.எது எப்படியோ தேர்தல் முடிந்தால் தான் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும்.