Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், கர்ப்பம் இல்லாமலேயே கர்ப்பம் என்று பொய் சொல்லி குடும்பத்தை ஏமாற்றியதோடு சொந்தக்காரர்களையும் கூட்டி வளைகாப்பு நடத்த வேண்டும் என்று விஜி டிராமா பண்ணினார். விஜி போடும் டிராமாவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக மாறன் வீரா பிளான் பண்ணி விஜிக்கு ரத்த பரிசோதனையை எடுத்தார்கள்.
அந்த ரிப்போர்ட்டே மாறன் ஹாஸ்பிடலில் வாங்கிய பிறகு விஜி கர்ப்பம் இல்லை என்ற உண்மை தெரிந்து விட்டது. இவர்களுடைய பிளானே புரிந்து கொண்ட விஜி. மாறன் வீராவுக்கு தொந்தரவு கொடுக்கும் விதமாக அடியாட்கள் மூலம் பிரச்சினை பண்ணினார். இதையெல்லாம் தாண்டி வந்த மாறன் ஆதாரத்துடன் வந்து வீட்டில் இருப்பவர்களிடம் விஜி நாடகம் ஆடியிருக்கிறார்.
உண்மையிலேயே விஜி கர்ப்பம் இல்லை, குடும்பத்தை பழிவாங்க தான் வந்திருக்கிறார் என்று வீடியோ ஆதாரத்தையும் போட்டு காட்டிவிடுகிறார். இதனால் ராமச்சந்திரன் மற்றும் வள்ளி, விஜி மற்றும் அவருடைய அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.
உடனே விஜி பஞ்சாயத்தை கூப்பிட்டு வாழ்க்கைக்கு ஒரு நியாயம் வேண்டும் என்று கேட்டு நிற்கிறார். அந்த வகையில் விஜி மீது தான் அனைத்து தவறும் இருக்கிறது என்று தெரிந்தாலும், விஜிக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று ஊர் தலைவர்கள் முடிவு பண்ணி விட்டார்கள்.
இதைக் கேட்ட ராமச்சந்திரன் என்ன நஷ்ட ஈடு கொடுப்பதாக இருந்தாலும் சொல்லு நான் கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார். உடனே விஜி, ராமச்சந்திரன் மற்றும் வள்ளி இருவரும் சேர்ந்து என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்.
இதை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் ஆத்திரமடைந்த நிலையில் கார்த்திக் இவளுடைய காலில் யாரும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டாம். எங்க வீட்டுக்கு வர சொல்லுங்க குடும்பம் நடத்துவதற்கு என்று சொல்லிவிடுகிறார். அதன்படி மறுபடியும் விஜி ராமச்சந்திரன் வீட்டிற்குள் வரும் பொழுது இனி என்னுடைய அதிகாரத்தை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்வமாக வருகிறார்.
ஆனால் வீரா மற்றும் மாறன், விஜய் ஆடும் வரை ஆடட்டும் எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து நான் ஆட போகிற ஆட்டத்தில் துண்ட காணும் துணியை காணும் என்று இந்த வீட்டை விட்டு அவளை போய்விடுவாள் என்று குடும்பத்தில் இருப்பவரிடம் சொல்கிறார்கள். அந்த வகையில் விஜிக்கு ஆப்பு வைக்கும் விதமாக மாறன் மற்றும் வீரா அரங்கேற்றத்தை நடத்தப் போகிறார்கள்.