Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி போடும் டிராமாவை சொந்தக்காரர்கள் அனைவரும் முன்னாடியும் தெரியப்படுத்த வேண்டும் என்று மாறன் பிளான் பண்ணிவிட்டார். அதனால் விஜிக்கு ரத்த பரிசோதனை எடுத்து அதன் மூலம் விஜி கர்ப்பமா இல்லையா என்ற விஷயத்தை கண்டுபிடிக்க மாறன் ஹாஸ்பிடலுக்கு போய்விட்டார்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட விஜி மாறனுக்கும் வீராவுக்கும் பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக அடியாட்களை அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் மாறன் ஆதாரத்தை வாங்கிக் கொண்டு வீராவிடம் கொடுத்து வீட்டிற்கு போக சொல்கிறார். அடுத்ததாக வளைகாப்புக்கு வந்த சொந்தக்காரர்கள் முன்னாடி விஜி, பிருந்தாவையும் அம்மாவையும் அவமானப்படுத்தி பேசுகிறார்.
இவங்க இங்கே இருந்து போனால் தான் என்னுடைய வளைகாப்பு நடக்க வேண்டும், இல்லையென்றால் நான் எதுவும் பண்ண மாட்டேன் என்று ஆர்ப்பாட்டம் பண்ணும் அளவிற்கு வீரா குடும்பத்தை பற்றி தவறாகவே பேசிக் கொண்டு வருகிறார். இதை பார்த்த வள்ளி எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்த நிலையில் வீரா ஆதாரத்துடன் வந்துவிடுகிறார்.
அந்த வகையில் அடியாட்களிடம் சண்டை போட்டு மாறனும் வீட்டிற்கு வந்து நிலையில் டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்டை காட்டி விஜி கர்ப்பம் இல்லை என்ற விஷயத்தை அனைவரது முன்னிலையும் போட்டு உடைக்கிறார்கள். எதனால் விஜி இந்த குடும்பத்திற்கு வந்தார் என்பதையும் அதற்காக பண்ணிய அட்டூழியங்கள் அனைத்தையும் மாறனும் வீராவும் முன்ன விடாமல் எல்லாரும் முன்னாடியும் சொல்லிவிடுகிறார்கள்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ராமச்சந்திரன், விஜியையும் அம்மாவையும் வீட்டை விட்டு அனுப்பி கார்த்திக் பிருந்தா வாழ்க்கையில் ஒரு சுமூகமான வாழ்க்கையை ஏற்படுத்தி வைக்கிறார்கள்.