Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி எதற்காக நம்ம குடும்பத்திற்கு வந்து எல்லாத்தையும் பழிவாங்க நினைக்கிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாறன் வீரா பிளான் பண்ணினார்கள். இந்த பிளானில் கண்மணியும் கூட்டணி போட்டு மாறன் வீராவுக்கு உதவி செய்து வருகிறார்.
அந்த வகையில் விஜி நம்பும் படியாக கண்மணி ஒரு டிராமா போட்டு வருகிறார். அதன்படி கண்மணி ஒரு ஜூஸில் மயக்க மருந்தை போட்டு உண்மையை சொல்ல வைக்கும்படி விஜியிடம் குடிக்க கொடுத்து விடுகிறார். விஜி, கார்த்திகை தன் வசம் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு மருந்தை டீ-யில் போட்டு அதை கண்மணி இடம் கொடுக்கிறார்.
கண்மணி அந்த டீயை கார்த்திக்கிடம் கொடுக்காமல் ராகவன் மற்றும் கண்மணி குடித்து விடுகிறார்கள். அதனால் இவர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அடுத்ததாக கண்மணி கொடுத்த ஜூசை குடித்து மயக்கத்தில் இருந்த விஜி, எங்க அப்பா இறப்பிற்கு அந்த ராமச்சந்திரன் தான் காரணம்.
அதனால் அந்த ராமச்சந்திரனையும் குடும்பத்தையும் பழிவாங்காமல் நான் விடமாட்டேன் என்று மயக்கத்தில் உளறுகிறார். இதை ஆதாரமாக மாறன் மற்றும் வீரா இரண்டு பேரும் சேர்ந்து போனில் வீடியோவாக எடுத்து விடுகிறார்கள்.
அந்த வகையில் விஜி வெளியே போகும் நேரம் வந்துவிட்டது என்பதற்கு ஏற்ற மாதிரி இந்த ஒரு ஆதாரத்தை வைத்து விஜியை வீட்டை விட்டு அனுப்பப் போகிறார்கள். அதனால் பிருந்தா மற்றும் கார்த்திக் வாழ்க்கையும் தப்பித்து விடும். கண்மணியும் ராகவனை புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் வாழ்வதற்கு தயாராகி விட்டார்.