Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி என்ன திட்டத்துடன் இந்த குடும்பத்திற்குள் நுழைந்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் விஷயத்தில் மாறன் ஓரளவுக்கு விஜி பக்கத்தில் நெருங்கி விட்டார். அந்த வகையில் மயக்கத்தில் விஜி உண்மையை உளறும் வகையில் கார்த்திக் பிளான் பண்ணி ஜூஸில் மயக்க மருந்தை கலந்து விட்டார்.
அதைக் குடித்துவிட்டு விஜி, என்னுடைய அப்பாவின் இறப்பிற்கு அந்த ராமச்சந்திரன் தான் காரணம். ராமச்சந்திரனையும் குடும்பத்தையும் பழிவாங்காமல் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன் என்று உளர ஆரம்பித்து விடுகிறார். இதைக் கேட்ட கார்த்திக் மாறன் மற்றும் வீரா ஆதாரத்தை கையில் வைக்கும் விதமாக வீடியோ எடுத்து விடுகிறார்கள்.
ஆனாலும் விஜி அப்பா இறப்பிற்கும் நம்முடைய அப்பாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று மாறன், வள்ளியை கூப்பிட்டு விஷயத்தை கேட்கிறார். அந்த வகையில் என்னுடைய அண்ணன் கடையில் தான் விஜய்யின் அப்பா வேலை பார்த்தார். ஆனால் கடையில் வேலை பார்த்துக்கொண்டே துரோகம் பண்ணும் விதமாக சில தவறுகளை பண்ணியதால் எங்க அண்ணன் அவரை கடையிலிருந்தும் வீட்டை விட்டு அனுப்பி வைத்துவிட்டார்.
அதன் பிறகு கொஞ்ச நாளைக்கு அவர் இறந்து போன விஷயம் எங்களுக்கு தெரிய வந்தது. இருந்தாலும் எதுவும் பண்ண முடியாது என்று எங்க அண்ணன் பீல் பண்ணதாக வள்ளி, மாறன் இடம் சொல்லுகிறார். உடனே மாறன் இதனால் தான் விஜி பழிவாங்க வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.
மேலும் கர்ப்பம் என்று பொய் சொல்லும் விஜி அடுத்த கட்ட ட்ராமாவை போடும் விதமாக தனக்கு ஊரை கூட்டி வளைகாப்பு நடத்த வேண்டும் என்று சொல்லுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட வள்ளி, வீராவிடம் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லுகிறார்.
ஆனால் மாறன் இதுதான் சரியான நேரம், சொந்தக்காரங்க முன்னாடி விஜியின் உண்மையான முகத்திரையை கிழித்து விட்டால் அவங்களை வீட்டை விட்டு அனுப்பி விடுவார்கள் என்று சொல்லி பிளான் போட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் விஜிக்கு வைக்க போகும் பொறியில் சிக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.