Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், மாறன் வியாபாரம் பண்ணுவதில் பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக மீதமுள்ள 8 லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த பணத்தை எப்படி ஏற்பாடு பண்ணுவது என்று தெரியாமல் மாறனும் வீராவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்பொழுது ராகவன் மற்றும் கார்த்திக் உதவி செய்ய வந்த பொழுது மாறன் வீரா வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள்.
அடுத்ததாக ராமச்சந்திரன், வீரா வீட்டிற்கு சென்று எட்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து உதவி செய்தார். ஆனால் அதையும் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் கடையை திருப்பிக் கொடுத்து விடலாம் என்று மாறன் வீரா முடிவு பண்ணி கடைக்கு போய் விடுகிறார்கள்.
அப்பொழுது அங்கே வந்து பணத்தை கேட்டு பிரச்சினை செய்தவரிடம் என்னால் பணத்தை ரெடி பண்ண முடியவில்லை. அதனால் நீங்கள் இந்த கடையை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அந்த சமயத்தில் வள்ளி அத்தை வந்து 8 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து அந்த நபரை வெளியே அனுப்பி விடுகிறார்.
எப்பொழுதும் மாறனும் வீரமும் பணத்தை வேண்டாம் என்று தான் மறுப்பு தெரிவித்தார்கள். ஆனால் வள்ளியத்தை மாறனிடம் இது தினமும் நீ எனக்கு கொடுத்த பணத்தை சேர்த்து வைத்தது தான் என்று சொல்லி மாறன் மனதை குழப்பி விடுகிறார். ஆனால் மாறன், நான் கொடுத்து வைத்த பணத்துக்கு கணக்கு தெரியாதா? மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நாலு லட்ச ரூபா தான் கொடுத்து இருப்பேன் என்று சொல்லி உண்மையை சொல்லி யார் கொடுத்தார் என கேட்கிறார்.
உடனே உண்மையை சொல்லும் விதமாக கண்மணி தான் இந்த பணத்தை கொடுத்து உதவி செய்தார். ஆனால் கண்மணி வந்து கொடுத்திருந்தால் நீங்கள் வாங்க மாட்டீங்க என்பதற்கு என்னிடம் கொடுத்து கொடுக்க சொன்னாள் என்று வள்ளியத்தை உண்மையை சொல்லி விடுகிறார். அப்பொழுது கண்மணிக்கு எப்படி 8 லட்ச ரூபாய் பணம் கிடைத்தது என்று கேள்வி வந்த பொழுது கண்மணி, அவரிடம் இருந்த நகை எல்லாம் விற்று பணத்தை கொடுத்து இருப்பது மாறன் வீராவுக்கு தெரிந்து போய்விட்டது.
உடனே வீட்டுக்கு போய் மாறனும் வீராவும், கண்மணி இடம் நன்றி சொல்கிறார்கள். ஆனால் கண்மணி இது பெரிய விஷயமே இல்லை, என் தங்கச்சி எப்போதுமே சந்தோஷமாக வெற்றியுடன் இருக்க வேண்டும். அதற்கு என்னால் முடிந்த சின்ன உதவி என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். இதையெல்லாம் பார்த்த மாறன், கொஞ்சம் கொஞ்சமாக அண்ணி தெரிந்துகொண்டே வராங்க. இப்படியே இருந்தால் ராகவனுக்கும் குடும்பத்திற்கும் நன்றாக இருக்கும் என சொல்கிறார்.