Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், மாறன் வீரா சுயமரியாதை உடன் ஜெயித்து காட்ட வேண்டும் என்று ராமச்சந்திரன் உதவி இல்லாமல் தனியாக ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அப்பொழுது பிசினஸ் செய்ய வேண்டும் என்பதற்காக கையேந்தி பவன் தள்ளுவண்டி ஹோட்டலை ஆரம்பித்தார். ஆனால் அதில் விஜி செய்த சதியால் மாறனால் தொடர்ந்து அந்த பிசினஸ் பண்ண முடியாமல் போய்விட்டது.
பிறகு ராமச்சந்திரன் ஐடியா கொடுத்தபடி துணி பிசினஸ் பண்ணலாம் என்று, மாறன் சைக்கிளில் ட்ரெஸ்ஸை வியாபாரம் பண்ணி வந்தார். அதன் பிறகு ஒரு ஷோரூம் மூலம் பிசினஸ் அடுத்த கட்ட லெவலுக்கு போக வேண்டும் என்று முடிவு பண்ணிய வீரா, ஆட்டோ ரேஸில் ஜெயித்துக் காட்டி அதன் மூலம் வந்த பணத்தை மாறனுக்கு பிசினஸ் வைத்து கொடுத்தார்.
தற்போது எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த பிசினஸ் ஓனரின் அண்ணன் என்று புதுசாக மாறனிடம் பிரச்சனை பண்ணி எட்டு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் மாறன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்.
வீரா ஆறுதல் கூறி பேசிக் கொண்டிருக்கும் போது ராமச்சந்திரன், மாறன் வீர தங்கி இருக்கும் வீட்டிற்கு வருகிறார். வந்ததும் வள்ளியிடம் 8 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வீராவிடம் கொடுக்க சொல்லி பிரச்சினையை முடிக்க சொல்கிறார். ஆனால் வீரா, ராமச்சந்திரன் செய்த உதவியை மறுக்கும் விதமாக பணத்தை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விடுகிறார்.
உடனே ராமச்சந்திரன் யாரோட உதவியும் இல்லாமல் ஜெயிக்கனும் என்று நினைக்கிறது சரிதான். ஆனால் பிரச்சினையை பெருசாக வளர விடாமல் எப்படியாவது சீக்கிரமாக முடித்து அடுத்த கட்ட வெற்றியை பாருங்கள் என்று சொல்லி போய் விடுகிறார். அந்த வகையில் மாறனுக்கு தற்போது வந்திருக்கும் பிரச்சனையை வீரா சுமூகமாக சரி பண்ணி விடுவார்.