TVK Vijay: கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா என்று வடிவேலு ஒரு காமெடியில் சொல்வார். அதுக்குன்னு தலைவர் யார் என்று கூட தெரியாத அளவுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் கூவிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தை பொறுத்த வரைக்கும் எங்கும் புஸ்ஸி ஆனந்த், எதிலும் புஸ்ஸி ஆனந்த், தூணிலும் புஸ்ஸி ஆனந்த், துரும்பிலும் புஸ்ஸி ஆனந்த். விஜய் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்காகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை கேமராவில் படம் பிடிப்பதற்காகவே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது.
வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த்
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்பது நமக்கு தெரியும். தலைவர் விஜய் இன்னும் தேர்தலை கூட சந்திக்காத நிலையில் வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த் என்று ஒரு கூட்டம் கத்துகிறது.
சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கும் அந்த வீடியோவில் ஆனந்த் தன்னுடைய காரை விட்டு இறங்குகிறார். அப்போது அவருடைய கையில் ஒரு வீர வாள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் என நெற்றியில் அடித்த மாதிரி குரல்கள் கேட்கிறது.

அட கேமராவுக்காகவாது கூவுகிறவர்களிடம் அடக்கி வாசிக்க சொல்வது போல் ஆக்டிங் கொடுத்திருக்கலாம். ஆனால் நாகராஜசோழன் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ என்ற கதையாக புஸ்ஸி ஆனந்த் அதை ரசிப்பது தான் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னன் தன்னுடைய கலை வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு இவர்களை நம்பி பெரிய ரிஸ்க் எடுக்கிறாரோ என்று தான் தோன்றுகிறது.