Coolie : ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளிவரவிருக்கும் கூலி படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டது. வெளிவந்திருக்கும் ட்ரைலர் சும்மா அட்டகாசம். இதில், உபேந்திரா மட்டும் விண்டேஜ் லுக்கில் உள்ளார். பிறகு பேருந்தில் நடக்கும் சண்டையில் ஒருவர் ரஜினி போல் தெரிகிறார். ட்ரைலரில் சஸ்பென்ஸ் ரொம்ப அதிகமாகவே இருக்கு.
வெளிவந்த உபேந்திராவின் கதாபாத்திரம்..
ட்ரைலரை பார்த்து கதையை நம்மால் முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் அனைவராலும் தேடப்படும் கூலியாக ரஜினி இருக்கிறார் என்பது மட்டும் தெரிய வருகிறது. ரஜினியும் சத்யராஜும் நண்பர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
இதில் மேலும் நமக்கு கிடைத்த ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால். உபேந்திரா பஸ் டிரைவர் ஆகவும், ரஜினி பஸ் கண்டக்டர் ஆகவும் பழைய கதையில் இருந்துருப்பார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்போ கண்டிப்பாக விண்டேஜ் கதை நல்ல மாஸாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
படம் இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் கதையை மையமாக கொண்டு நகரும் என தெளிவாக தெரிகிறது. பழைய கதையில் உபேந்திராவும் ரஜினியும் நண்பர்களாக இருந்துருப்பார்கள் போல. உபேந்திராவின் மரணத்திற்காண காரணம் கண்டுபிடிப்பதற்காக ரஜினி களத்தில் இறங்குவது போல கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவழியாக “ட்ரைலரும்” வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து படம் வெளிவந்து ஏற்கனவே உள்ள ஹைப் குறையாமல் இருக்குமா? அல்லது ஓவர் பில்டப் மண்ணை கவ்வி விடுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.