சூர்யா அடுத்தடுத்து லக்கி பாஸ்கர் புகழ் வெங்கி அட்லூரி, ஸ்டுடியோ கிரீன் என கமிட் ஆகியுள்ளார். தன்னுடைய 45ஆவது படமான கருப்பு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை RJபாலாஜி இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு 46வது படத்தில் வெங்கி அட்லூரியுடன் இணைகிறார்.
இருதற்கிடையில் கடந்த இரண்டு வருடங்களாக நிலுவையில் நிற்கும் படம் வாடிவாசல். இப்பொழுது அந்த படத்திற்கு உயிரூட்டும் விதமாக தயாரிப்பாளர் தானு சூர்யாவை சந்தித்துள்ளார். அவர் இந்த படத்திற்காக எல்லோருக்கும் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த வாடிவாசல் படத்திற்கு 10 கோடிகளுக்கு மேல் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இதனால் இதை ட்ராப் செய்ய வேண்டாம் எப்படியாவது இந்த கதையை டேக் ஆன் செய்து விடலாம் என வெற்றிமாறனையும், சூர்யாவையும் சமாதானம் செய்து வருகிறார் தானு.
சூர்யா தரப்பில் இருந்தும் இதற்கு இப்பொழுது பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த ப்ராஜெக்ட் இப்போதைக்கு இல்லை என்பதை மட்டும் தெளிவாக கூறிவிட்டாராம். சூர்யா வெங்கி அட்லூரியின் படம் , ஞானவேல் ராஜா படம் முடிப்பதற்கே 2026 ஆம் ஆண்டு இறுதியாகிவிடும்.
இதனால் தயாரிப்பாளர் தாணுவிடம் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து தான் இந்த ப்ராஜெக்ட் என்று சொல்லிவிட்டாராம். ஒரு பக்கம் தானு கொடுத்த காசுக்கு வட்டி கட்டி கொண்டிருக்கிறார். இயக்குவதாக இருந்த வெற்றிமாறனும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.