Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்திலுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்ததால் இனி பாண்டியனின் கடை பக்கம் வர வாய்ப்பே இல்லை. ஏனென்றால் எப்பொழுது தான் இந்த கடையில் இருந்து நமக்கு விமோசனம் கிடைக்கும் என்று பல வருஷங்களாக ஏங்கிக் கொண்டிருந்த செந்திலுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த கவர்மெண்ட் உத்தியோகம் கிடைத்திருக்கிறது.
அதனால் கடையில் பாண்டியன் தனியாக கஷ்டப்படுவார் என்ற எண்ணத்தில் சரவணன், நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டு இனி கடையில் வந்து வேலை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை தங்கமயில், பாக்கியத்திடம் சொன்னதும் இதுதான் நல்ல சான்ஸ் ஏற்கனவே மீனாவின் வீட்டுக்காரருக்கு அரசாங்க வேலை கிடைத்து விட்டது.
இதனால் எல்லோரும் மீனாவையும் செந்தில் தான் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். ஆனால் நீ அதற்கெல்லாம் வழிவிடாமல் உன்னுடைய குழந்தையை காட்டி எல்லோரையும் உன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டுட்டு வந்து விடு. அது மட்டும் இல்ல உன் புருஷனையும் கடையில் வேலை பார்க்கும் பொழுது நம்ம கடை எல்லா சொத்தும் நமக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தில் வேலை பார்க்க சொல்லு.
அவரின் கடின உழைப்பை பார்த்து பாண்டியனே, ஆச்சரியப்பட்டு இந்த கடையை நீயே வச்சுக்கோ என்று கொடுக்கிற மாதிரி நடந்துக்க சொல்லு என்று போட்டுக் கொடுக்கிறார். தங்கமயிலும் ஒண்ணுமே தெரியாத போல, அம்மா சொல்வதை சரி சரி என்று தலையாட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்து விட்டார். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் எறிய கதையாக தான் தங்கமயில், கர்ப்பமானதை வைத்து தனக்கான காரியத்தை சாதிக்க பார்க்கிறார்.
தங்கமயில் என்ன சொன்னாலும் அதை நம்பும் விதமாக சரவணனும் கேட்கிறார். அதனால் தங்கமயில் அதற்கு ஏற்ற மாதிரி டிராமா பண்ணிக் கொள்கிறார். வீட்டில் வேலை பார்க்காமல் இரு என்று எல்லோரும் சொன்னாலும் நான் தான் வேலை பார்க்கிறேன் என்று போட்டுக் கொடுக்கும் விதமாக சரவணன் இடம் நைசாக பேசி பரிதாபத்தை தேடிக் கொள்கிறார். இந்த மாதிரி தங்கமயில் மனம் மாறுவதற்கு பாக்கியம் மாதிரி ஒரு அம்மா அவ்வப்போது போட்டுக் கொடுப்பதால் தங்கமயில் திருந்த வாய்ப்பே இல்லை.