Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தன் பொண்டாட்டி மாதிரி தனக்கும் அரசாங்க வேலை கிடைத்துவிட்டது. இனி எம்டன் தொல்லை கிடையாது என்று செந்தில் சந்தோஷமாக இருக்கிறார். இவருடைய சந்தோஷத்துக்கு ஒரு விதத்தில் மீனாவின் அப்பாவும் காரணம். ஏனென்றால் அவர்தான் பணத்தை லஞ்சமாக கொடுத்து வேலை வாங்கிக் கொடுப்பதற்கு ஏற்பாடு பண்ணினார்.
ஆனால் இது லாஜிக்கே இல்லாமல் ஒரு டிராக் போய்க் கொண்டிருக்கிறது. என்றால் லஞ்சம் கொடுத்து ஒரு அரசாங்க உத்தியோகத்தை வாங்கிவிடலாம் என்று தவறான கருத்தை காட்டுவது போல் இருக்கிறது. அந்த வகையில் நிச்சயம் இதை சொதப்பும் விதமாக செந்திலுக்கு இந்த வேலை கிடைக்காமல் ஏதோ ஒருவிதத்தில் பறிபோகப் போகிறது.
ஆனால் அதற்குள் செந்திலின் மாமனார், பாண்டியன் வீட்டிற்கு வந்து உளறி விடுகிறார். அதாவது ஆபீஸில் வேலை செய்யும் அதிகாரி எனக்கு ரொம்ப வேண்டியவர். அவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து தான் வேலை வாங்கி கொடுக்கணும் என்று நான் நினைத்தேன். ஆனால் நீங்களே பத்து லட்ச ரூபாய் கொடுத்து உங்க பையனுக்கு வேலை விஷயத்தில் உதவி செய்து விட்டீர்கள் என்று சொல்லுகிறார்.
இதை கேட்டதும் பாண்டியன் அதிர்ச்சியாகிவிட்டார், ஆனாலும் சம்பந்தி முன்னாடி எதுவும் சொல்ல முடியாததால் அமைதியாகிவிட்டார். மீனாவின் அப்பா போனதும் செந்திலிடம் வேலைக்கு கொடுத்த பத்து லட்ச ரூபாய் பணம் உனக்கு எங்கு இருந்து வந்தது என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் தயக்கத்தில் இருந்த செந்திலை பாண்டியன் அடிக்கப் போய்விட்டார்.
பிறகு மீனா, நான் தான் லோன் வாங்கி 10 லட்ச ரூபாய் கொடுத்தேன் என்று சொன்னதும் இந்த வீட்டில் பெரிய மனுஷங்க கிட்ட எதுவும் சொல்றது கிடையாது. நீங்களா உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுப்பதாக இருந்தால் எதற்கு கூட்டு குடும்பம் என்று நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று கோபப்பட ஆரம்பித்து விட்டார். விளையும் வாங்கி கொடுத்து பின்னாடியே ஆப்பையும் வைத்து விட்டார் மீனாவின் அப்பா.
இதனால் பாண்டியன் மற்றும் கோமதி இடம் வெறுப்பை சம்பாதித்துக் செந்தில் அவஸ்தைப்பட போகிறார். இது மட்டும் இல்லாமல் கிடைத்த அரசாங்க வேலையும் பறிபோகப் போகிறது. பேராசைப்பட்டு அகல காலை வைத்தால் உள்ளதும் போய்விடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக செந்தில் நிற்கப் போகிறார்.