Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து கட்சி வேலைகளை சிறப்பாக செய்து வருகிறார். கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில் அவர் கட்சியை பலமாக்க அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார்.
கட்சி கட்டமைப்பு முறைகளிலும் மிகுந்த கவனிப்போடு நடந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அதுமட்டும்மல்லாமல் நடிகர் விஜய் அவர்கள் அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள்,ஆளுங்கட்சிகள் அனைத்துமே விஜய் அவர்களின் மீது ஒரு கண்ணை வைத்தவாறு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் அவர்கள் எப்படி கட்சி கட்டமைப்புகளை செய்கிறார் என மூத்த அரசியல்வாதியாக இவர்கள் கண்காணிக்கலாம் தவறு இல்லை.
விஜய்-யை பின்பற்றும் EPS..
விஜய் அவர்கள் நன்றாக அரசியல் தெரிந்த அரசியல்வாதியாக செயலாற்றுவது கண்டு வியந்து போகிறார்கள் மற்ற கட்சியினர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் அவர்களை பின்பற்றுவதாக, அவரது டிரஸ் கோடுகளை பின்பற்றி வருகின்றனர் மற்ற கட்சியினர்.
முதலில் நடிகர் விஜய் அவர்கள் அரசியல்வாதியாக வந்தவுடன் அணிந்த ஆடை முறையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பின்பற்றியிருந்தார். இதுவே பெரும் பேச்சாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று.
இதற்கு அடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசியல்வாதி விஜய் அவர்களின் ஆடைமுறையை பின்பற்றி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அரசியல் கருத்துகளை பின்பற்றலாம், அரசியல் வழிமுறைகளை பின்பற்றலாம் ஆனால் சாதாரணமாக ஒரு ஆடை முறையை பின்பற்றுவது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது போல.