Srikanth: சட்டவிரோத பொருளை பயன்படுத்தியதன் காரணமாக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து கிருஷ்ணாவும் விசாரணையின் பிடியில் இருக்கிறார்.
இதனால் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமும் இப்போது உச்சகட்ட பயத்தில் இருக்கிறது. ஏனென்றால் இவர்களை தொடர்ந்து பல முக்கிய பிரபலங்கள் மாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஸ்ரீகாந்த் கைதுக்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கிறது. முக்கிய சிலருக்கு விரிக்கப்பட்ட வலையில் தான் இவர் சிக்கி இருக்கிறார். ஆளும் கட்சியும் இதில் தற்போது மும்முரமாக இறங்கி உள்ளது.
யாருக்கு விரிக்கப்பட்ட வலை.?
ஏனென்றால் ஸ்ரீகாந்த் போ..தை பொருளை வாங்கிய பிரசாத் என்பவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். அதுவும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். எப்போது நினைத்தாலும் நேரடியாக அவரை சந்திக்கும் அளவுக்கு பவர் கொண்டவர்.
அதனாலேயே இந்த விவகாரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அடுத்த வருட தேர்தலை முன்னிட்டு கூட இருக்கலாம். தேர்தலுக்கு முன்பாக இந்த இந்த வழக்கு விசாரணை முடிய வேண்டும்.
அதனாலயே காவல்துறையும் முனைப்போடு செயல்பட்டு வருவதாக யூடியூப் சேனல்களில் பத்திரிக்கையாளர்கள் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவலை தெரிவித்து வருகின்றனர். அதில் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி மேற்கண்ட தகவலை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஸ்ரீகாந்த் தரப்பில் மிகப்பெரும் வக்கீலை வைத்து வாதாடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. ஆனாலும் அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து பல பிரபலங்கள் சிக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதில் மூன்றெழுத்து நடிகை தொடங்கி சாக்லேட் பாய் நடிகர், மாஸ் ஹீரோ ஒருவர், மற்றொரு பப்ளிசிட்டியை விரும்பும் நடிகை என பலர் இந்த லிஸ்டில் இருக்கின்றனர். அடுத்தடுத்த விசாரணையில் ரசிகர்கள் ஆடி போகும் அளவுக்கு பலருடைய உண்மை முகம் தெரிய வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.